20 July 2013 1:38 pm
கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் குருதி வெள்ளை நிறத்தில் காணப்படும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக் கட்டுப்படுத்தும் நரம்பணுத் திரள்கள் உள்ளன. எனவே, இதன் தலையை வெட்டி விட்டால் கூட, கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர் வாழும். அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான் பூச்சிகள் வாழும் எனவும் நம்பப்படுகிறது.