20 July 2013 1:37 pm
கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பு ஆகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தைக் காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வை இவ்வாறானதே. சில விலங்குகளுக்கு இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களைக் காண உதவுகின்றன. (எ.கா) பச்சோந்தி, முயல் ஆகியன.
மனிதனின் ஐம்பொறிகளுள் மிகவும் இன்றியமையாத உறுப்பு கண் ஆகும். மேலும், உடலின் ஏனைய உறுப்புகள் நம் வயதுக்கு ஏற்ப வளரும் தன்மை கொண்டவை. ஆனால் கண்கள் மட்டுமே பிறக்கும் போது இருக்கின்ற அளவிலேயே இறுதி வரை இருக்கும். இத்தகைய அரிய கண்களை ஒரு நாளைக்கு இரு முறை சுத்தமான தண்ணீரால் கழுவுவதுடன், “வைட்டமின் ஏ” சத்துகள் நிறைந்த பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்டு வந்தால், பார்வைத் திறனை நீண்ட நாள் தக்க வைத்துக் கொள்ளலாம்.