5 June 2013 12:38 pm
1870 ஆம் ஆண்டு ஜெர்மனி ஒருங்கிணைந்த பிறகு அங்கு தொழில் துறையில் வளர்ச்சி ஏற்பட்டது. ஏராளமான மூலப் பொருள்களும், பொருள்களை விற்பனை செய்ய சந்தையும் தேவைப்பட்டன. செய்சர் இரண்டாம் வில்லியம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கருதினார். உலக அரங்கில் தனது மதிப்பை உயர்த்துவது மட்டுமன்றி, மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும் ஜெர்மனிக்கு குடியேற்றங்கள் தேவைப்பட்டன. எனவே ஜெர்மனியின் பாதுகாப்பிற்காக இரண்டாம் கெய்சர் வில்லியம் படை வலிமையை பெருக்கி, வடகடலில் உள்ள ஹெலிகோலாண்ட் என்னுமிடத்தில் கப்பற்படையை நிறுவினார். இதுவே முதல் உலகப் போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. முதல் உலகப் போருக்குப் பிறகு பல்வேறு நாடுகளில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. செக்கோஸ்லோவாகியா, போலந்து ஆகிய நாடுகளில் குடியேற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டன. லிதுவேனியா, லாட்வியா, எஸ்கோனியா நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது. உலகப் போரைத் தடுக்கவும், உலக அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச சங்கம் 1920 ஆம் ஆண்டு சனவரி 20 ஆம் நாள் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவா நகரில் தோற்றுவிக்கப்பட்டது.