5 June 2013 12:51 pm
நீர் யானை ஆப்பிரிக்காவிலுள்ள பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஓர் விலங்காகும். நீர்யானை பன்றி வகையைச் சேர்ந்தது. இது ஒரு தாவர உண்ணி; கூட்டம் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர் யானைகள் வரை காணப்படும். இதன் ஆயுட்காலம் 40 முதல் 50 ஆண்டுகள் ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியவை. இதற்கு தனி ஈர்ப்பு விசை உள்ளது. அதனால் நீர்யானை நீருக்கடியில் நடக்கவும் ஓடவும் முடிகிறது. உப்பு இல்லாத ஏரிகளிலும், ஆறுகளிலும் வாழக் கூடியது. நிலப்பரப்பில் உள்ள புற்கள் தான் இவற்றின் முக்கிய உணவாகும். நீர்த் தாவரங்களை இவை சாப்பிடுவதில்லை. நீர்யானை குட்டிகள் நீருக்குள்ளேயே பிறப்பதால், தம் முதல் மூச்சுக்காவே நீந்தி நீர் மட்டத்திற்கு வருகின்றன. பெரிய நீர்யானைகள் 3 முதல் 5 நிமிடங்களுக்கு ஒரு முறையும், குட்டி நீர் யானைகள் 2 முதல் 3 நிமிடங்களுக்கு ஒரு முறையும் சுவாசிக்கும். நீருக்கடியில் இவை தூங்கிக் கொண்டிருந்தாலும் கூட கண் விழிக்காமலே நீரின் மேல் பகுதிக்கு வந்து மூச்சுக் காற்றை வாங்கிக் கொண்டு மீண்டும் நீருக்கடியில் சென்று விடும். இவை எல்லாமே தானியங்கி முறையில் தானாகவே நடக்கும். நீருக்கடியில் செல்லும் போது மூக்குத் துவாரங்கள் தானாக மூடிக் கொள்ளும். நீரிலே வாழ்ந்தாலும் கூட நீர்யானைக்கு நீச்சல் தெரியாது. தங்களிடமுள்ள சிறப்பு ஈர்ப்பு விசை மூலம் தண்ணீருக்கு அடியில் செல்லும்; பின் மேலே வரும். இதன் வியர்வை சிவப்பாக இருக்கும். நீர்யானை பிறந்ததும் ஒரு சுண்டெலியை விட சிறியதாக இருக்கும். மனிதனை விட வேகமாக ஓடக் கூடியவை.