5 June 2013 2:06 pm
நமது கண்கள் எப்போதும் ஈரப்பதமுள்ளவையாக இருக்க வேண்டும். இதற்கென கண்களின் மேற்பகுதியில் கண்ணீர்ச் சுரப்பிகள் உள்ளன. அந்தச் சுரப்பிகளில் உருவாகும் நீர், கண்ணின் மேல் பகுதியில் விழுந்து, நாம் இமைக்கும் போது, எல்லாப் பகுதியிலும் பரவி, கண்களை ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறது. நாம் அளவுக்கதிகமாக இன்ப துன்பங்களுக்கு ஆட்படும் போது அல்லது வெங்காயம் போன்ற பொருள்களின் வாசனையை நுகர நேரும் போது, கண்ணீர்ச் சுரப்பிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதன் விளைவாக, வழக்கத்துக்கு அதிகமான நீர் உற்பத்தியாகி கண்களின் மேல்பரப்பில் பாய்கிறது. இமையோரங்களில் தேங்கி, பின்னர் கண்ணீர்த் துளிகளாக விழுகிறது.