25 May 2013 3:43 pm
மக்கள் தொகையை பொறுத்தவரையில் துபாய் மட்டுமின்றி, ஐக்கிய அரசு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை வாய்ந்ததாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 விழுக்காடு மக்கள் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசு பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாட்டு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது.