25 May 2013 3:59 pm
உலகெங்கும் 2,400க்கும் மேற்பட்ட பாம்பினங்கள் வாழ்கின்றன. எல்லா வகைப் பாம்புகளுமே தன் சட்டையை உரிக்கும். ஏனைய எந்தப் பிராணிகளிடமும் காணமுடியாத விசித்திரப் பழக்கமான சட்டை உரித்தலைப் பாம்பிடம் மட்டுமே காணலாம். அதற்கான காரணம் என்னவென்றால், பாம்பிற்கு சாகும் வரையிலும் வளர்ச்சி உண்டு. இதன் உடல் வாழ்நாள் முழுவதும் வளர்ந்து கொண்டே போகும்! முதுமையில் உடல் வளர்ச்சியின் வேகம் அவ்வளவாக இருக்காதே தவிர, அப்போதும் வளர்ச்சி இருக்கும். அதனால் பாம்பின் உடல் வளர, வளர அதன் மேல் தோலின் நீளம் குறைந்து போகிறது. ஆகவே தனது பழைய தோலை (சட்டையை) உரித்து விடுகிறது பாம்பு. இப்படி பாம்பு தன் சட்டையை உரிப்பது பாம்புகளின் இனத்தைப் பொறுத்து ஒரு மாதத்திலிருந்து 3 மாத இடைவெளிக்குள் நிகழும். சொரசொரப்பான தரையில் உடலைத் தேய்த்துத் தேய்த்து தன் சட்டையை உரிக்கிறது.