மலரும் இதழ்! - தமிழ் இலெமுரியா

16 October 2016 12:15 pm

அண்டை மாநிலத்திலிருந்து வந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து வருவது போன்று சிறந்த அச்சு வடிவமைப்போடு கட்டுரை, கவிதை, சிறுகதையுடன் ‘தமிழ் இலெமுரியா’ மாத இதழ் மலர்வது வாழ்த்துக்குரியது. புரட்டாசி இதழில் வெளிவந்துள்ள ‘தம்பிக்கு எந்த ஊரு’ சிறுகதை தமிழன் சாதியை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறான் என்பதை தெளிவாக்குகிறது.நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை  - 609001எழில் கொஞ்சும்  குக்கிராமம்இயற்கை எழில் கொஞ்சும்  குக்கிராமத்தை  கவிஞர் இரவீந்திரன் மிக  அழகாகவும் அற்புதமாகவும் காட்டியுள்ளார்.  தலையங்கக் கருத்து,  தனித் தமிழ்  இயக்கம்  கண்டு  நூற்றாண்டு  கடந்த பின்பும் தொடக்க  நிலையிலேயே  இருப்பதைப்  படம் பிடித்துக்  காட்டியது. இன்னும் கடுமையாக  உழைத்தால் தான் ஒரளவாவது  இலக்கினை  அடைய முடியும்.கருமலைத் தமிழாழன், ஓசூர் – 635 109அருமையிலும் அருமை!கோவை பூ.அ.இரவீந்திரன் எழுதிய ‘ஈடு ஏது? பாடல் அருமையிலும் அருமை படைப்பாளிக்கு இனிய வாழ்த்துகள்! பாராட்டு!மா.கந்தசாமி, தஞ்சாவூர் -613091தமிழை வீழ்ச்சியில் இருந்து மீட்போம்!புரட்டாசி இதழில், தலையங்கம் படித்தேன்… உலகின் வரலாற்று சிறப்பு மிக்க மொழிகளை ஆய்வு கண்டு, வெளிப்படுத்தி, அவைகளின் ஒப்பாய்வுகளை சீர்தூக்கி ஆய்ந்து இறுதியில்; உயர் தனிச்செம்மொழி- தமிழ்மொழி மட்டுமே என நெஞ்சம் நிமிர்த்திக் கூறியுள்ளீர்கள். வரலாற்றுக் காலத்தில், நடைமுறை நிகழ்வுகளால் பின்னடைவு ஏற்பட்டதையும் தமிழ் – தனித்தமிழாக நிலைக்க  தமிழறிஞர்கள் திட்டமிட்டு செயல் வடிவம் கண்டதையும் தனித்தமிழ் பெயர்கள் உரு மாற்றம் கண்டதையும் சொற்பழக்கம் கண்டதையும் சுட்டியுள்ளீர்கள். தமிழ் மொழி அழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய கடமை நமக்குள்ளது என்பதை உணர்த்தியுள்ளீர்கள். ஈதல் எந்த அளவில் அவசியமாகிறது என்பதை பாரதியாரின் பெருநோக்கினால் அறியலாம். புலவர் பெரிஞ்சித்தரனார், தாம் பெற்ற பரிசிலை பகிர்ந்தளிக்க மனைவிக்கு இட்ட கட்டளை நெஞ்சம் நெகிழச் செய்கிறது. கட்டுரையாசிரியருக்கு பாராட்டுகள்!துரை. சௌந்தரராசன், காஞ்சிபுரம் – 631501ஆசியாவின் பெரிய சேரி.சரவணா இராசேந்திரன் எழுதிய ‘பொருளாதார நகரின் இருவேறு தோற்றங்கள்’ கட்டுரையில் மும்பையின் வரலாற்றை மிகவும் தெளிவுடன் எழுதியுள்ளார். மும்பை நகரம் தோன்றிய விதம், இங்கு 20 இலட்சம் தமிழர்கள் வாழ்வதையும், ஆசியாவின்  ‘பெரிய சேரி’என்று அழைக்கப் படும் தாராவியில் தமிழர்களின் வாழ்க்கை முறையும் அவர்களின் வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளையும் மிகத் தெளிவாக படம்பிடித்தது போல் எழுதியுள்ளார். தமிழர்களின் பெருமைகள், வரலாறுகள் என்ன? என்பதை மறந்து வாழும் தமிழர்கள் இனியாவது எந்த நோக்கத்தோடு இங்கு வந்துள்ளோம் என்பதை கருதி தெளிந்து வாழ்வோமாக.மு.தமிழ் மாறன், செம்பூர் – 400043.நெஞ்சம் நெகிழ்ந்ததுஆவணி இதழ் தலையங்கத்தில் ‘தமிழுக்கோர் அரியணை’ பற்றி துல்லியமாக தாய்த் தமிழ் பற்றுடன் தாங்கள் தீட்டிய அற்புதக் கட்டுரையைப் படித்து நெஞ்சம் நெகிழ்ந்து போனேன். 50 ஆண்டுகளுக்கு முன்னர் அண்ணா முதல்வராக இருந்து நடத்திய மாபெரும் உலகத் தமிழ் மாநாட்டில் மீட்கப்பட்ட உலக பல்கலைக் கழகங்களில் வள்ளுவம் பொதுமறையாக உரிய இருக்கைகள் தங்கிட  செயல் பட்டார்கள். அந்த சிறப்பான தமிழுக்குத்தான் ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் தாய்த் தமிழுக்கு உரிய இருக்கை அமைய  மிக உருக்கமுடன் தாங்கள் வற்புறுத்தி தீட்டிய  தலையங்கம் மிகமிக அருமை. தங்கள் தமிழ் நெஞ்சம் எல்லோரிடமும் இல்லையே… கலைமாமணி க.வேழவேந்தன், மயிலாப்பூர் – 600 004சமுகத்தில் தாழ்வு எப்போது நாம் உண்மையான விடுதலையைப் பெறப் போகிறோம்? ஒருபுறம் பொருளாதார வளர்ச்சிக் குறித்து கவலைப் படும் நாம் எப்போது தலித் மக்களுக்கு சமுக விடுதலையை தரப் போகிறோம்? அம்மக்கள் சமுகத் தளத்திலும் பொருளாதாரத்திலும் சமநிலையை என்று அடைவார்கள்?. அவர்களை பிற சாதியினரால் ஒதுக்கப்படும் நிலை என்று மாறுமோ? ‘சமுகத் தாழ்வுடன் பொருளாதார ஏற்றம் சாத்தியமா?’ என்ற  கட்டுரை இக்கேள்விகளை எழுப்பியுள்ளது. சிந்திக்கத் தூண்டும் கட்டுரை!ம. தயாளன், நாகர்கோயில் – 629003.மக்கள் புரட்சிஆவணி இதழில், தலையங்கத்தில் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவும் திட்டத்திற்கு இந்தியப் பணம் 40 கோடி ரூபாய் ஆகும் என்கிற தகவலைக் கண்டேன். இங்கே கோடிக் கணக்கிலே சரக்கு உந்தில் அடுக்குவதில் தீவிரம் காட்டிகிறார்களே தவிர தமிழுக்கு அப்படியான முக்கியத்துவம் கொடுத்திட கோடிகளை சேர்ப்பதில்லை. முதன்மைக் கட்டுரையின் இறுதியில், இந்த நிலை நீடிக்குமானால் மக்கள் புரட்சி வெடிப்பது சாத்தியமே என்ற வரிகளையும் படித்தேன். குழந்தைகளிடம் தொட்டில் பழக்கம் போல மதுவை ஊட்டி வளர்க்கிறார்கள் இவர்களிடம் எப்படி புரட்சி ஏற்படும்.மூர்த்தி, சென்னை – 600100எச்சரிக்கை!ஆவணி இதழில், தென்னை வளர்ப்பு குறித்து தகவல்கள்.. கருத்துகள் நன்று. ‘தமிழகத்தில் வேரூன்றிய பிற மொழிகள்’ கட்டுரை படித்ததும் சிந்திக்க தூண்டியது. ‘திரு’ என்பது மங்கி ஸ்ரீ ஆகி வருகிறது. தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.     மா.சுகுமார், கல்பாக்கம் – 603102தமிழை நிலை நிறுத்துவோம்.‘தமிழுக்கோர் அரியணை’ தலையங்கம் தமிழர்கள் அனைவரது எண்ணத்தையும் எதிரொலிப்பதாக உள்ளது. சரியான நேரத்தில் சரியான கருத்தை அறிவிப்பதில் ‘தமிழ் இலெமுரியா’ சிறப்பாகப் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழை நிலை நிறுத்த அனைவரும் ஒத்துழைப்போம். புரட்டாசி இதழில், முதல் பக்கத்தில் பூ.அ.இரவீந்திரனின்  கவிதையை வெளியிட்டு தமிழ் உலகில்  கவிதைக்கு முதல் மரியாதை அளித்திருக்கிறீர்கள் தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞர்களில் பூ.அ.இரவீந்திரனும் ஒருவர்.  அவருக்கு தமிழ்நாட்டில் இன்னும் உரிய  மரியாதை வழங்கபடவில்லை. நீங்கள் வழங்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. மற்றொரு பெருங்கவிஞர் கொ.வீ.நன்னன். பெரியாரைப் பற்றி அவர் எழுதிய  இசைப் பாடல் மிக அருமை. உங்கள் ஏட்டில் கவிதையின் அருமை உணர்ந்து வெளியிடுவதைப் பாராட்டுகிறேன். கோ.மோகனரங்கன், ஆதம்பாக்கம் – 600088.மனதைத்  தொட்டது.‘தமிழுக்கோர் அரியணை’தலையங்கம் வீரத்தமிழை உலகம் போற்ற நல் அரியணையில் அமர்த்த எழுதியவை மன நெகிழ்ச்சியைக் கொடுத்தது. தமிழ், தமிழ் என மூச்சுக்கு மூச்சு பேசும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சற்று சீர்தூக்கி செயல்பட்டு, முயற்சித்து உறுதுணையாக இருக்க வேண்டும். என் மனதைத் தொட்ட இரு  கவிதைகள், தந்தை, மகன், பேரன்  தலைமுறைகளின் யதார்த்தமான உண்மைகளை மிக அழகாக கொடுத்துள்ளார் ஆராவமுதன். இது போன்ற கவிதைகளை எதிர்ப்பார்க்கின்றேன். அடுத்த கவிதை சாதிக் எழுதிய ‘உண்மை முகம்’. நடுத்தட்டு மக்களின் இயல்பான நிலையை மிக அழகாக, தெளிவாக மனதை தொடும் அளவிற்கு எழுதியுள்ளார். அனைத்துக் கட்டுரைகளும் அருமை. குறிப்பாக வளவன் எழுதிய மெய்யான கட்டுரையை சீர்தூக்கி பார்க்கும் போது மனதிற்கு வலியை கொடுத்தது. ‘மருதாணி’ மனதை சிவக்க வைத்து விட்ட சிவகாமிக்கு வாழ்த்துகள். நல்ல திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதியதற்கு நன்றி.காரை கரு.இரவீந்திரன், பீவண்டி – 421302ஆவலுடன்  காத்திருக்கிறோம்புரட்டாசி இதழில் சரவணா ராசேந்திரனின்  முதன்மைக்  கட்டுரை பொருளாதார நகரின்  இருவேறு தோற்றங்களை  தெளிவாகக்  காட்டியுள்ளதை  வெளியிட்டு இருந்தீர்கள். அருமை. எனது மனம்  திறந்த பாராட்டுகள். விமலன்  எழுதிய  சந்தை வெளி நாகரிகம்  மனதைத் தொட்டது.  ஆவணி இதழில், ‘சமுகத் தாழ்வுடன் பொருளாதார ஏற்றம் சாத்தியமா’ கட்டுரை அருமை. பாராட்டுகள். நல்ல தெளிவாகவும் அதற்கேற்ற படமும் மிகவும் பொருத்தமாக இருந்தது. ஆசுகவி ஆராவமுதனின் ‘தந்தை, மகன், பேரன்’ என்ற பாத்திரங்களோடு அமைந்த கவிதை கருத்தாழ மிக்கதாக உள்ளது. பாராட்டுகள்! ‘தமிழ்  இலெமுரியா’ இதழை ஒவ்வொரு மாதமும்  பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.கா.திருமாவளவன், திருவெண்ணைய்நல்லூர் – 607203."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி