வாசகர் மடல்கள் - தமிழ் இலெமுரியா

14 January 2016 9:44 pm

அருமை‘தமிழ் இலெமுரியா’வை தொடர்ந்து படித்து வருகிறோம், இதழ் மிகவும் அருமையாக பயனுள்ள செய்திகளைத் தாங்கிவருகிறது.முக்தா சீனிவாசன், சென்னை – 600 017சிந்திக்க தூண்டியவைமார்கழி மாத இதழ் கண்டேன். இழந்த சோகங்களின் குடுபத்தின் வெளிப்பாடாக அலசி, ஆராய்ந்து, பொது நோக்கத்துடன் எழுதப்பட்ட மனித நேயம் மலரட்டும்" தலையங்கம் உண்மையின் வெளிப்பாடு. நமது அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்ய வேண்டும்.  தமிழ்நாட்டின் பேரிடர் முதன்மைக் கட்டுரையில் திருமதி நங்கை எழுப்பிய வினாக்களுக்கு நல்ல அரசியல் வல்லுனர்கள் அலசி ஆராய வேண்டிய செய்திகளை கொடுத்துள்ளார். மிகவும் தெளிவான ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை பாராட்டுக்கள். கவிதைகள் அனைத்தும் சிந்திக்க  தூண்டியவை. பெண்மையின் பேராண்மை கட்டுரையில் வழங்கப்பட்ட அழகான ஓவியங்கள், ‘ராணித் தேனீ’ பொம்மை படங்கள், கட்டுரையில் கருத்துகள் மிக அருமை. அண்ணல் அம்பேத்தகர் கடவுள் நமக்கு கொடுத்த அற்புதமான மனித நேயமுள்ள நல்மனம் கொண்ட வள்ளல். அவரை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது எனது கருத்து.- கரு. இரவீந்திரன், பிவண்டி –  421 302பளிச்சிட்டனநான் யார்? என்பதை விட நாம் யார்? என்பதற்கு அரிய விளக்கம் கிடைத்தது! பெற்றோரின் பேரின்ப மகிழ்வில் உருவாகிய பாசப் பறவைகள் நாம். பெரும் போட்டியில் எதிர் நீச்சல் போட்டு கோடிக்கணக்கான எதிரிகளை வீழ்த்தி மகுடம் சூட்டிக் கொண்ட மாமன்னர்தாம் நாம்  என்ற உண்மையை புத்துணர்வூட்டிற்று.அண்ணாவின் மாஜிகடவுள்கள் எனும் நூலில் ஒளிந்துகொண்டிருந்த செய்திகள் ‘புதைந்து போன தெய்வங்கள்’ கட்டுரையில் பிரதிபலித்தன. அண்ணல் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகளில் அவர் பகுத்துச் சென்றுள்ள பல உண்மைகள் பளிச்சிட்டன.-புலவர் ந. ஞான சேகரன், திருலோக்கி –  609 804மதவெறி‘மனித நேயம் மலரட்டும்’ தலையங்கம் கண்டேன். சென்னையில் பொழிந்து தள்ளிய மழையில் மக்கள்பட்ட அவலங்களை வாசித்தேன். குறைகளை மற என்பதைக் கண்டு நானும் மெய் மறந்து விட்டேன். சென்னையில் பொழிந்து தள்ளிய மழை வெள்ளத்தில் கூவம் தூய்மையாகிவிட்டது. கரை வேட்டிகளில் உள்ள கறைகள் மட்டும் அப்படியே தான் இருக்கிறது! புதைந்து போன தெய்வங்கள் பகுதியில் மதுவின் கேடு பற்றி சொல்பவர்கள், மதத்தின் கேடு பற்றி வாய்திறப்பதில்லை வசனம் கண்டேன். மதத்தின் பெயரால் மூளைச் சலவை செய்யப்பட மதவெறி மூடர்களின் கொலை வெறிமிரட்டல்கள் இருப்பதால் தான் வாய்மூடல்.மூர்த்தி, சென்னை – 600 100ஆயிரம் பெரியார்‘தமிழ் இலெமுரியா’ மார்கழித் திங்கள் இதழின் அட்டைப்படம்  தமிழ்நாட்டின் பேரிடரைப் பற்றிய நெகிழ்ச்சியை உருவாக்கிய படமாகும். தந்தையின் தோளில் மகள். பாச வெள்ளத்தில் மூழ்க வேண்டியவள். இந்தப் பேரிடர் வெள்ளத்தில் மூழ்கிவிடக் கூடாது என்ற தந்தையின் பரபரப்பான முகம். அதைப் பார்க்கிற நமக்கு நெஞ்சைப் பிழிகிறது. தாங்கள் தலையங்கத்தில் சொல்லியதைப் போல இந்தப் பேரிடர் ஒருபுறம் மக்களைப் பிணங்களாக்கினாலும், இன்னொரு புறத்தில் மதங்களையும் சேர்த்துப் புரட்டிக் கொண்டு போனது. இந்துக்கள், இசுலாமியர், கிறிஸ்துவர், ஜைனர், பகுத்தறிவாளர் எல்லாரும் மதங்களை மறந்தார்கள்; மனிதர்களையே நினைத்தார்கள். மதங்களை மட்டுமல்ல, ஜாதிகளை மறந்தார்கள்; கட்சிகளை மறந்தார்கள்; - பெ. சிதம்பரநாதன், கோவை – 641 002சிந்திக்க வைத்ததுமனிதனாக இரு; மனிதனாக வாழ்; மனித நேயத்தை மலரவிடு என்ற உயரிய எண்ணத்தைத்  தலையங்கம்  ‘உள்ளங்கை நெல்லிக்கனி’யென எடுத்துக்  காட்டியது.  வீரமாமுனிவரின்  அளப்பரிய தமிழ்ப்பணியை விளக்கமாக எடுத்துக் கட்டியவருக்கு  மனமார்ந்த நன்றி. அம்பேத்கரின்  அருந்தொண்டின்  பயன் முழுவதுமாக இன்றுவரை விளையவில்லையே; இதை அம்பேத்கரின் கொள்கைத்  தோல்விக்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாமா? ‘புதைந்துபோன தெய்வங்கள்’  வித்தியாசமான கருத்துருவைத்  தந்து வாசகர்களை சிந்திக்க வைத்துள்ளது. செ.வ.மதிவாணன், கள்ளக்குறிச்சி –  606 202உதவிக்கரம்ஒற்றுமைக்குள்  வேற்றுமையும் வேற்றுமைக்குள்  ஒற்றுமையும் கொண்டு விளங்குவது நமது இந்திய திருநாடு. இயற்கை பெருமழை, வெள்ளம் இவைகளால்  தன்  சீற்றங்களைக்  காட்டுகிறது! தமிழ்நாட்டில்  ஏற்பட்ட பெருமழை, பெருவெள்ள இடர்களால், மனிதநேயம் வெடித்துச்சிதறி, உடைமைகள்  தருவதிலும்  பேதமற்ற உதவிக்கரம்  நீண்டவண்ணமும்  அல்லபட்டு சீரான நிலைக்கு தமிழகம்  திரும்பியது. ஒன்றுபட்ட தமிழக மக்களை காண முடிந்தது!. இதையே தலையங்கமும் உணர்த்தியது.துரை.சௌந்தரரசன், காஞ்சிபுரம்- 631 501கவர்ந்தவை!‘தமிழ் இலெமுரியா’ இதழ் மராட்டிய மண்ணிலிருந்து மிகச்  சிறப்பாக செய்து தமிழ்ப்  பணி வருகிறது. எமது உளமார்ந்த பாராட்டுக்கள்!  தமிழகராதியின்  தந்தை முத்தமிழ்க் காவலர், ஆன்மிகமா? ஆன்மீகமா?, எங்கே ஏரிகுளம்?, அண்ணல்  அம்பேத்கர்,  புதைந்து போன தெய்வங்கள்  போன்றன மார்கழி  இதழில்  எம்மைக்  கவர்ந்தவை!- பெ.சிவசுப்ரமணியம், சென்னை – 600 081பெரும் சேதம்மார்கழி மாத இதழில் த.இராமலிங்கம் எழுதிய ‘எங்கே ஏரி, குளம்?’ கவிதை படித்தேன். நீர்நிலைப் பகுதிகளில் எல்லாம் அநியாயமாக ஆக்கிரமிப்புகளாக மாற்றப்பட்டிருப்பதை வயிற்றெரிச்சலுடன் கவிதையாக படைத்திருக்கிறார். குப்பைக் கழிவுகளை கொட்ட குளம், ஏரி போல வசதியான இடங்கள் நகர நிருவாகத்தினருக்கு கிடைப்பதில்லை. அதன் பயன் தான் வீட்டுக்குள் நீர் புகுந்து ஏற்பட்ட பெரும் சேதம்.- எஸ்.மோகன், கோவில்பட்டி – 628 501குமுகாயப்  பயனூட்டம்மும்பை தாராவியில் பிறந்து வளர்ந்தவர் திருவாட்டி நங்கை என்று கருதுகிறேன்! தமிழ்நாட்டில் வெள்ளப் பேரிடரை துல்லியமாய் ஆய்ந்து தெள்ளியல் சிறப்பொடு கட்டுரை படைத்துள்ளார்! கருத்தியல் கண்ணோட்டம் குமுகாயம் பயனூட்டம் ஆய்ந்து படைத்திருப்பது அருமை! சங்கீதா இரா.கண்ணன் புதை கல்படிமை தெய்வங்கள் குறித்து ஆழ்ந்தாய்ந்து அறிவம் உற்று கட்டுரை படைத்துள்ளார். கற்படிமை தெய்வங்களுக்கு குடம்முழுக்கு நீராட்டி, பூச்சூட்டி, சுராலை (சாம்பராணி) புகையூட்டி தீயம் (தி+அம்-சூடம் சுடரின் வெப்பு தட்டி சமச்சீர்மை) காட்டி வழிபடுதலும் வணங்கலும் செய்து காசு பறிப்பது உழைக்காமல் ஏய்த்து பிழைப்போர் குமுகாயம் மக்களை ஏமாற்றி தெய்வப் புனைகதைகளை கூறி நம்புமாறு செய்து தாமே அதற்கு வழிகாட்டி ஆக்கி கொழுத்து திமிரோடு நெரிப்பு படுத்தி இருப்பதே ஆகும்! குமுகாயம் – குழுமி கூடி வாழும் மக்களின் அமைவு!- அ.ம.பெ. காவளர் தமிழ்அறிவன், பேட்டைவாய்தலை – 639 112சங்கமமாக்கியதுதிருநெல்வேலி மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ‘இலெமுரியா அறக்கட்டளை’ நடத்திய விழாவில் தாங்கள் மாணவமணிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டியது பெருமிதம் தந்தது. மகாராட்டிராவும் திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டியும் தமிழால் சங்கமமாகியது, தமிழ் இலெமுரியா சங்கமமாக்கியது. ‘பயணமும் பாதையும்’ ஆசிரியவுரை ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது. மோடியின் பயணம்தாம் வளர்ந்து கொண்டிருக்கிறது. பாதை முடியவில்லை. என்னென்னவோ எதிர்பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இனிமை தரும் இணக்கம் ஒரு நல்ல மனிதநேயப் போதனை.- க.அ.பிரகாசம், கொடுமுடி – 638 151பாராளுமன்றத்தில்…தலையங்கம் ஆழமானது; நியாயமானது "மகாராட்டிரா மாநிலத்தில் வாழும் தமிழ் மக்கள் மராட்டிய அரசைப் பொறுத்தவரை வெளி மாநிலத்தவர்கள். அதே தமிழ் மக்கள் தமிழ்நாடு அரசின் பார்வையிலும் வெளி மாநிலத்தவர்கள் தமிழக அரசின் எந்தத்திட்டத்தின் கீழும் எவ்வித நன்மையும் பெற்றிடத்தகுதி இல்லாதவர்கள்.இது எந்த வகையான தேசியம்? என்று நீங்கள் எழுப்பிய கேள்வி பாராளுமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய கேள்வி. பிற மாநிலத் தமிழர்களின் உரிமைக்கு வாதாடும் வழக்கறிஞராக ‘தமிழ் இலெமுரியா’ விளங்குவது பாராட்டுக்குரியது.- கோ.மோகனரங்கன், சென்னை – 600 088உரைவீச்சுதமிழர் இருக்குமிடம் தமிழகம். அதன் பாரம்பரிய தொடர்ச்சியாக தங்கள் ‘தமிழ் இலெமுரியா’ ஆட்சி நிகழ்த்துகிறது. உரைவீச்சு தொகுப்புப் பற்றி எழுத ஆயிரம் பக்கங்கள் வேண்டும். பர்மிய அவலத்தைக்காட்டி உலகே கலங்கி கண்கலங்கச் செய்து விட்டீர்கள். தொடர்க தங்கள் தமிழ் பணி.- பெ.ஆராவமுதன், கள்ளக்குறிச்சி – 606 202மனித நேயம்அறிவியலில் வளர்ச்சி பெற்று சந்திரனுக்கும் செவ்வாய் கோள்களுக்கும் மனிதன் சென்று குடியேறலாமா? என ஆய்வு நடத்திக்கொண்டிருக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இயற்கை தரும் மழையைக் கூட ஒழுங்காகப் பயன் படுத்தி வளர்ச்சிகாண முடியாமல், மழை வெள்ளத்தில் சிக்கி 700க்கும் மேற்பட்டமனித உயிர்கள், கால் நடைகள் பலியாகி இருக்கின்றன. என்கிற செய்தி உண்மையிலேயே தமிழினத்தையே தலை குனிய வைக்கிறது. தீமையிலும் ஒரு நன்மை. மனிதர்களை ஆட்டிப்படைத்த ஆணவம், சாதி, மத, சடங்கு, சாத்திர வேறுபாடுகள் தொலைந்து மனித நேயம் செழித்த அந்த நாட்களைப் போல மனிதர் வாழும் நாட்கள் அனைத்துமே இருந்து விடக்கூடாதா? தங்களின் தலையங்கம் சுட்டிக் காட்டும் உண்மை இதுவே விழிப்புணர்வூட்டும் ‘தமிழ் இலெமுரியா’ செம்மொழித் தமிழ்போல் செழித்து வளர வாழ்த்துகள்!- க.தியாகராசன், குடந்தை – 612 501ஆதிக்க இனங்கள்மகிழுந்தில்லா இந்தியா கட்டுரை சிந்திக்க வைத்தது. புத்தர், அசோகருக்குப் பிறகு வந்த ஆதிக்க சக்திகள் ஆதிக்க இனங்கள் தங்கள் சுயநலங்களுக்காக ஆசையை துறக்கச் சொன்ன புத்தரின் அசோகரின் வார்த்தைகளைப் புறக்கணித்தன் விளைவே இது. உலகமே புகைப் பகையிலிருந்து பூமியைக் காக்கப் போராடிக்கொண்டிருக்கும் வேலையிது… ஆனால் எதற்கும் கவலைப் படாமல் இயற்கை அன்னையை சிதைக்கும் செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணமுள்ளது.‘கொண்டைவலை’ சிறுகதை மீனவ மக்களைக் காட்டி மனதை நெகிழ வைத்தது. பம்பாய் புதியவன், காஞ்சிபுரம் – 603 102மரபுப் பாடல்…"மகிழுந்தில்லா இந்தியா" படிக்கும் போதே மனதுக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. பரிதிமாற் கலைஞர் பற்றிய மரபுப் பாடல் நன்றாக இருந்தது. பிரபாகரன் என்கிற பெயரை மட்டும் கேள்விப்பட்டிருந்த எனக்கு இம்மாவீரனைப் பற்றிய விவரங்களை அறியச் செய்தது, ‘மாவீரன் பிரபாகரன்’ என்ற கட்டுரை. ‘பட்டிமன்றமா’ பட்டி மண்டபமா?’ எனும் ஆய்வுக் கட்டுரையானது நீண்ட காலமாக என்னிடத்தில் நிலவி வந்த ஐயத்தை நீக்கும் விதத்தில் அமைந்திருந்தது.- இரா. இராணி, மாத்தாங்காடு – 611 111மனதை தொட்டு…‘ஓர் அஞ்சல் அட்டை’எனும் விவசாயி ஒருவரின் அவலக் கதை மனதை தொட்டு வேதனையுறச் செய்கிறது. ‘உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ எனும் பழமொழிக்குச் சான்றாக அமைந்துள்ளது சிறுகதை.த.சுப்பிரமணியன், செகந்தராபாத் – 500 061"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி