வாசகர் மடல்கள் - தமிழ் இலெமுரியா

16 August 2014 10:26 am

புத்துணர்ச்சி பெற்றேன் தேர்தலும் ஊழலும்" அருமையான ஆய்வுக் கட்டுரை! நடந்து முடிந்த தேர்தல் அமைதியாகத்தான் நடந்தது! ஆயினும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பணநாயகம்தான் விளையாடியது. "சொல்லிலும் செயலிலும் மாணிக்கம்" என்ற சேது குமணனின் நேர்காணல் முயற்சி திருவினையாக்கும் எனும் குறள் மொழிக்கு எடுத்துக்காட்டு. "தசரதபுரம்" புரட்சிகரமான புதுமைக் கதை. இதுவரை எவரும் சிந்திக்காத முறையில் உள்ளது! இப்படி இருந்திருக்குமா? தமிழ்நாட்டில் நீர்நிலைப் பெயர்கள் அருமை! எத்தனை வளமான மொழி நம் தமிழ்மொழி!. கவிதைகள் எல்லாம் அற்புதம். "மழை" எனும் கவிதையில் கூரை சொந்தமாயிருக்கும் உங்களுக்கு மழையின் கொடுமை புரியாது" எத்தனை கசப்பான உண்மை! கூரையேயில்லாது வெட்ட வெளியில் வாழும் மக்கள்தொகை எண்ணிக்கை எத்தனை? எப்போது அவர்களுக்கு விடிவு? மொத்தத்தில் இதழ் முழுவதும் படித்து முடித்த பிறகு ஒரு புத்துணர்ச்சியைப் பெற்றேன். வாழ்க தமிழ் இலெமுரியாவின் தமிழ்த் தொண்டு.- த.சுப்பிரமணியன், செகந்தராபாத் – 500 061துருப் பிடித்த நீதிமன்றங்கள் ஆனி இதழ் கண்டேன். தேர்தலும் ஊழலும் ஆய்வில் இராசாசி எங்களது வேலூர் சிறையில் இருந்து எழுதிய வசனங்களை வாசித்தேன். நீதிமன்றங்கள் தரும் தீர்ப்பின் நிலைகள் பற்றிய உரையில் நன்கு உறைக்கும் படியான செய்திகள் பரவலாக இருந்தது. இரட்டை நிலையில் சட்டம் பயன்படுகிறது. நீதித்துறை நம் அரசியல்வாதிகளுக்கு நிகராகப் போய்க் கொண்டு இருக்கிறது. மாற்றம் கொண்டு வருவதற்குத்தான் யாருமில்லை. நான்கு தூண்களில் ஒன்று நீதிமன்றங்கள் அதுவும் துருப்பிடித்து விட்டது. துரு போகுமா? வரிவிலக்கு தகவல் படித்தேன். கலைவாணரின் தர்ம குணத்தை அறியச் சென்ற அதிகாரி கொடுத்த யோசனையும் படித்தேன். கணக்கில்லாது தர்மம் செய்கிறவன் அரசாங்கத்திற்கு எதிரியாகி விடுவான் போல இருந்தது. – மூர்த்தி, வேலூர்.ஆக்கப்பூர்வமான தலையங்கம் "மும்பைக் கலைஞர்" எனப் போற்றப்படும் தமிழறிஞர் .த.மு.பொற்கோ அவர்களின் மறைவுச் செய்தியினை "தமிழ் இலெமுரியா" மூலம் அறிந்து மிக வருத்தமுற்றேன். கனிவான பேச்சும் இனிய குணமும் கொண்ட அன்னாரது மறைவு ஈடு செய்ய இயலாதது. மும்பை தமிழ்ச் சங்கத்திலும் தாராவி தி.மு.க அலுவலகத்திலும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் என்றும் நெஞ்சை விட்டு அகலாதது. இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் புதிய அரசு சிறப்பாக ஆட்சி அமைய "தெளிவான வளர்ச்சிப் பாதை எது" எனும் ஆக்கப்பூர்வமான தலையங்கம் வரவேற்பிற்குரியது. – ஜி.சுப்பையன், திருவனந்தபுரம் – 695 036தசரதபுரம் கருத்தியல் பாராட்டுக்குரியது தமிழியம் அயல் மாநிலத்தினில் ஓம்பும் தமிழ் இலெமுரியா இதழ் குழுமம் சீருற்று வாழி! தமிழம் பெண்டிர் நெஞ்சம் ஆழத்தில் தமிழறம் பதிவுற்று இருப்பதை "தசரதபுரம்" கதை தெளிவு படுத்தியது. கற்புக்கு மதிப்பு கொடுக்கும் இராவணப்புரம் அதற்கு எதிராய் அமைவுற்று இருக்கும் தசரதபுரம், வெறுப்புற்று நாடு புகாமல் காடு புகும் சீதை ஆழ்ந்து படித்து தெளிவோர்க்கு உணர்த்தும் உள்ளுறு கருத்தும் படைப்பும் பெண்ணியம் ஓம்பன் விழையும் சிறுகதை! புதிய மாதவி கருத்தியல் பாராட்டுதலுக்குரித்தது!  அயல் மாநிலத்தில் தமிழியம் நலன் செழிப்பு வளர்ச்சி ஓம்பும் தமிழ் இலெமுரியா தொண்பது விழுக்காடு தமிழ்ச் சொற்கள் கொண்டு இலங்குவது சிறப்புக்குரியது. "இலங்கமூரியா" தமிழியர் சொற்பொருள் சிதைந்து "இலெமுரியா" ஆயிற்றா எனும் இதழியல் பேணுவது தமிழியம் நலனே! வாழ்த்துகள். கட்டுரைகள் கருத்தியல் நெறிவுடையவை. தமிழ் சொல் எழுத்துகளை சீர்படுத்தும்போது உயர் பொருள் தாழ்ச்சி உறுதல் நன்றன்று. – பெ.காவளர் தமிழ் அறிவன், திருச்சி – 639 112நிறைமதியைக் கண்ட மகிழுணர்வு ஆடி தமிழ் இலெமுரியா இதழைப் படித்த போது மீண்டும் ஒரு முறை நிறைமதியைக் (ரமலானில் பிறைநிலா மட்டுமே தோன்றும்) கண்ட மகிழுணர்வு மேலிட்டது. நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கை பற்றிய தெளிவான தலையங்கம், தமிழ் வழிக் கல்வியை ஆங்கிலச் சனி தொடர்வது குறித்த முதன்மைக் கட்டுரை, கல்விக் கண் திறந்த காமராசர் (அவரது ஆட்சியில் தமிழ் வழியில் கட்டணமில்லாக் கல்வி கற்றவரில் யானும் ஒருவன்) நினைவுக் குறிப்புரை, தெள்ளுதமிழ்ச் சிறுகதை, பண்டைத் தமிழர் வாழ்வில் களவும் கற்பும் கண்டு வாழ்ந்த வாழ்க்கை விளக்கம் என்ற பாணியில் இதழை ஒரே அமர்வில் சுவைக்க வாய்ப்பு நல்கிய ஆசிரியருக்கு நன்றி. – க.த.அ.கலைவாணன், வேலூர் – 632 002மக்களின் குரலொலிதலையங்கத்தில் இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு திறந்த புத்தகம் போல கரணியமாக விளங்குகின்ற எண்வகை விபரங்களை பகிரங்கமாக வெளியிட்டு மக்களின் குரலொலியாக முத்திரைப் பதித்து உள்ளீர்கள்! உலக நாடுகளுடன் நம் நாட்டை பலவகை ஒப்பீடுகளுக்கு உடன்படுத்தி, நம் நாடு எந்தளவில் பின் தங்கியுள்ளதை பொட்டில் அடித்தாற்போல் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்! அரசாள்வோர், அரசு பல்துறை ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் நோக்கும் போக்கும் எப்படி அமைய வேண்டும் என சுட்டியது நம் நாட்டு நலன் மீது தாங்கள் கொண்ட பற்றை உணர்த்துகிறது. – துரை சௌந்தரராசன், காஞ்சிபுரம் – 631 501வரலாற்றுச் சுவைகள்"சீர்வரிசை சண்முகராசனார்" வரலாற்றுச் சுவைகள் எனும் வரலாற்றுக் குறிப்புகளை தனது இறுதி மூச்சு அடங்கும் வரை யாத்தளித்து தூரிகையோடு மறைவுற்ற செய்தி கேட்டு மனம் விம்பி வேதனையுற்றேன். – இரா.முல்லைக்கோ, பெங்களூர் – 560 043"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி