வாசகர் மடல்கள் - தமிழ் இலெமுரியா

16 October 2014 8:02 am

புரட்சிக்கவியின் வாக்கை மெய்ப்பிக்கும் இதழ்! தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை" என்னும் புரட்சிக்கவியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில், தாய்த் தமிழ்நாட்டின் நிலை உள்ள சூழலில் மராட்டிய மாநிலத்திலிருந்து நல்ல தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் "தமிழ் இலெமுரியா" திங்களிதழின்  பணி தொடர, சிறக்க, வெற்றியடைய வாழ்த்துகள்.- கோட்டை செல்வம், கோட்டைக்காட்டுவலசு – 638 109நம் நினைவில் வாழும் சீர்வரிசையார் அட்டையில் புன்னகைப் பூக்கும் சீர்வரிசையாரின் படத்தைப் பார்க்கும் போது அவர் மறையவில்லை; என்றும் நம் நினைவில் வாழ்கிறார் என்பதை உணர்த்துகிறது. "எரிந்து போன தமிழ் நூலகம்" தலையங்கம் கண்கலங்க வைத்தது. அவரது வாழ்க்கை வரலாற்றை நூலாக்கி அவருடைய நினைவு நாளன்று வெளியிட்டுள்ளது. வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு, நீர் உறிஞ்சி நச்சு மரம், மனிதகுல மேம்பாட்டில் வானொலியின் பங்கு, மௌனம் பேசிய மொழி, சொல்லும் செயலும் கவிதைகள் என இதழ் முழுவதும் நல் முத்துகளாகத் திகழ்கிறது.- தீபம்.எஸ்.திருமலை, மயிலாப்பூர் – 600 004நன்மையேதும் இல்லை "நச்சு மரம்" கட்டுரைப் படித்தேன். நாட்டு வளன் கெடுக்கும் "நச்சு முள் மரம்" குறித்து தினமலர் சிறப்பிதழிலும் செய்தித்தாளிலும் 18 ஆண்டுகளுக்கு முன்பே பன்முறை வினத்தமொடு எழுதியுள்ளேன்! காவிரி மழை பெய் இடங்களில் மழை பொய்த்ததற்கு நச்சு முள் மரங்களின் வளர்ச்சியே அடிப்படைக் கரணியம்! மழை நீரையும் உறிஞ்சும் ஆற்றல் பெற்றவை நச்சு முள் மரங்கள். தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் நச்சு முள் குத்தி புரையோடி நடப்பதற்கும் இயலாமல் அல்லலுற்றார்! இது போன்று பயனேதும் இன்றி தீமையே அதிகம் உள்ளது.- அ.ம.பெ.காவலர் தமிழ் அறிவன், பேட்டைவாய்தலை – 639 112இளைஞர்களின் வழிகாட்டி ஆவணி இதழில் சீர்வரிசை சண்முகராசனார் மறைந்த செய்தி அறிந்து தங்களின் துயரில் பங்கேற்றேன். நல்ல தமிழ்த் தொண்டரை இழந்தோம். அவரது பணி இன்றைய இளைஞர்களுக்கு வழி காட்டியாக அமையும். சீர்வரிசையாரின் வரலாற்றுப் பதிவுகளை புகைப்படங்களுடன் தொகுத்து வெளியிட்டுள்ளமை மன நிறைவைத் தருகின்றது. தொடரட்டும் "தமிழ் இலெமுரியா"வின் தமிழ்த் தொண்டு!- பெ.சிவ சுப்பிரமணியன், சென்னை – 600 081பாராட்டுகள் ஆவணி இதழ் மூலம் சீர்வரிசை சண்முகராசனார் சிறப்புகளை அறிய முடிந்தது. நல்ல முறையில் அவரை நினைவு கூர்ந்துள்ளீர்கள். "தமிழ் இலெமுரியா" இதழ் இலக்கியம் மட்டும் பேசாமல் சமுகம் சார்ந்த வாழ்வியல் செய்திகளைப் பேசுவது பாராட்டுக்குரியது.- வளவ.துரையன், கடலூர் – 607 002பண்புடையார் புகழ் பட்டுப் போகாது! மும்பை சீர்வரிசை சண்முகராசனாரைப் பற்றிய தலையங்கம் உள்ளத்தை நெகிழச் செய்து விட்டது. அடிமைப்பட்ட ஒரு சமுதாயத்தின் எழுச்சிக்காக உழைத்தோர் வரலாற்றில் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள். இனமானம் காத்த அந்த திராவிடச் செம்மலின் புகழ் திராவிட இயக்க வரலாற்றில் ஒளிவீசிக் கொண்டேதான் இருக்கும். அன்னாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவியல், மருத்துவம், அரசியல், குழந்தைகள் நலம், தமிழ் முழக்கக் கருத்துகளைக் கிளறும் கவிதை வரிகள் என அனைத்துமே ஏனைய தமிழ் ஏடுகளை விட மிகச் சிறப்பாக இருக்கிறது. மராட்டிய மாநிலம் தமிழுக்குக் கொடுத்த கொடை "தமிழ் இலெமுரியா". தனது தமிழ்ப் பணித் தொடரோட்டத்தில் முதன்மைப் பெற்று வாழ, எனது உள்ளங் கனிந்த வாழ்த்துகள்.-க.தியாகராசன், குடந்தை – 612 501சீர்வரிசையாரின் பன்முகச் சிறப்புகள் "நினைவுச் சிறப்பிதழ்" கட்டுரை படித்துப் பார்த்தேன். மனம் நெகிழ்ந்தேன். நெல்லை நகரிலிருந்து சென்று மும்பை மாநகரில் வசித்து வந்த மாமனிதரை நினைத்து வியந்தேன். திராவிடர் கழகத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு மற்றும் சமூகப் பணியை அவரின் பணி மூலம் அறிந்தேன். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியால் "பெரியார் விருது" அன்னாருக்கு வழங்கப்பட்டதையும் அறிந்தேன். இதழில் இடம் பெற்ற கட்டுரைகள், கவிதைகள் மற்றும் மடல் அஞ்சலிகள் மூலம் அன்னாரின் பன்முகச் சிறப்புகளை அறிய முடிந்தது. "தமிழ் இலெமுரியா" இதழுக்கு என்னுடைய பாராட்டுகள்.-பே.நடராசன், திருநெல்வேலி – 627 012முப்பிறவித் தொடர்பு சீர்வரிசையாரின் மறைவுச் செய்தியை ஆவணித் "தமிழ் இலெமுரியா" இதழ் வாயிலாக அறிந்தேன். மிக்க அதிர்ச்சியுற்றேன். ஒருமுறை நேரில் சந்தித்து அளவளாவினேன்; பிறிதொருமுறை தொலைப்பேசியில் அவருடன் நெடுநேரம் உரையாடும் பேறு பெற்றேன். மும்முறைத் தொடர்பு எனினும் முப்பிறவித் தொடர்பு போல் இப்போது நினைத்தாலும் நெகிழ்கின்றன. யாவருக்கும் இப்பேரிழைப்பைத் தாங்கும் வல்லமையைத் தரவேண்டி இறைவனை இறைஞ்சுகிறேன்.- முனைவர் சுதா, சென்னை தனித்தன்மை வாய்ந்த இதழ் "தமிழ் இலெமுரியா" ஒவ்வோர் இதழும் வேறுபட்ட இதழ் என்பதைப் பறை சாற்றுகின்றது. இதழில் வரும் எழுத்துரைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள். நமக்குக் கிடைத்தது பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற பரந்த உள்ளம் இல்லாமல் ஒவ்வொரு மாநிலத்தாரும் பிரிந்து இருப்பதற்குக் காவிரி நீர்ச் சிக்கல் ஓர் எடுத்துக்காட்டாகும். நடுநிலை நிற்காத நடுவண் அரசும் செயல் மறந்து போய் இருக்கிறது. வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கட்டுரை இதைத்தான் கோடிட்டுக் காட்டுகிறது. மொரிசியசு தீவில் முழங்கிய தமிழ் முழக்கம் பெருமிதம் கொள்ள வைக்கிறது. தங்கள் சேவை செழிக்கட்டும்! வாழ்த்துகள்!- கவிஞர் அழகனார், கோழிக்கோடு – 673 004அழிக்க வேண்டிய பார்தினியம் நீர் உறிஞ்சி நச்சு மரம் வேலிக்காத்தான் பற்றிய கட்டுரை மிகவும் அருமை. பயனுள்ள தகவல்கள் படைத்தவருக்குப் பாராட்டுகள். வேலிக்காத்தான் வருகையால் நம் மண்ணின் மரங்கள் காணாமல் போய்விட்டது. இது போன்ற தகவல்களால் விழிப்புணர்வு ஏற்பட்டு வேலிக்காத்தான் குறைந்தால் நல்லது. வேலிக்காத்தான் போலவே பார்தினியம் என்னும் செடியும் இல்லாத இடமே இல்லை என்ற அளவில் பெருகிவிட்டது. இதனை அழிக்க ஆவண செய்ய வேண்டும். – ஜெ.பொன்னரசு, திருவள்ளூர் – 602 021படமாகிய அவரை பாடமாகக் கொண்டுத் தொடர்க! ஆவணி இதழில் சீர்வரிசை சண்முகராசனாரின் நினைவுச் சிறப்பிதழ் பார்த்து, படித்து பரவசமடைந்தேன். அன்னாரின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையும் கவலையும் தருகிறது. அவரது மறைவால் வாடும் அனைத்து தரப்பு தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவருக்கு எனது வீர வணக்க அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். சீர்வரிசை சண்முகரசனார் திராவிடப் பேரியக்கத்தால் ஈர்க்கப்பட்டு சமுகநீதிக் காவலன் தந்தை பெரியாரின் பெரும் சீடராக, மொழிப்பற்று, இனப்பற்று காப்பவராக – சமூகநீதி போற்றுபவராக வாழ்ந்து இந்தியத் துணைக் கண்டத்தின் நுழைவு வாயில், தொழில் பெரும் மாநகரமான மும்பைப் பகுதியில் தமிழ் வளர்த்து தன்னலம் கருதாது, பொதுநலம் போற்றிய பெரும் பண்பாளராய், பகுத்தறிவாதியாய், சீர்திருத்த செம்மலாய் வாழ்ந்திருக்கிறார் என்ற பேருண்மை அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களுடைய வாக்குகளிலிருந்து அறியப் பெற்றேன். அன்னாருக்கு "தமிழ் இலெமுரியா" நினைவுச் சிறப்பிதழ் வெளியிடுவது நன்றியுள்ள உண்மைத் தமிழர்களின் கடமையாகும்.  சீர்வரிசை சண்முகராசனார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த சிறந்த உயர் பண்பாளர் என்பதை தங்களின் கருத்துகள் வாயிலாக அறிகிறேன். "யாதும் ஊரே யாவரும் கேளிர்", ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தமிழ்ச் சித்தாந்தம், தமிழர் சித்தாந்தம் இவைகளை கட்டிக்காத்தவர்; பெரியாரின் பெருந்தொண்டர். மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் எதையும் எதிர்பாராமல் உழைத்த, உழைத்து வருகிற இந்திய துணைக் கண்டத்தின் சான்றோரையும் குறிப்பாக தமிழ்நாட்டின் வாழ்விலும் வளர்ச்சியிலும் தனி அக்கறை கொண்ட தமிழ்ச் சான்றோர்களையும் கட்சி வேறுபாடின்றி, சாதி, சமய வேறுபாடின்றி அவர்களின் பெரும்புகழ் பாடிய பெருமகனார். அவரே தங்களின் வழிகாட்டியாகவும் விளங்கினார் என்பதை அறிய நான் எல்லையற்ற மகிழ்ச்சி காண்கிறேன். அவர் காட்டிய பாதையில், வழியில் செயல்பட்டு படமாகிய அவரை பாடமாக ஏற்று தங்களின் தூய தொண்டு தொடர வாழ்த்துகின்றேன்.- இரா.பெர்னார்டு, நாகர்கோவில்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி