11 January 2015 6:19 pm
செயற்கரிய செய்தீர்அயலகம் வாழ்ந்தும் தமிழ் உணர்வோடுஅகம் மகிழ் வெய்திடும் உழைப்பும்;வயலகம் வளரும் பசும்பயிர் போலவாழ்க்கையை வெற்றி செய்தற்குபுயலிடை மழைபோல் தமிழ் இலெமுரியா புதுப்புது செய்திகள் திரட்டும்,செயல் மிகு உயர்வு தமிழக வேரில்தேன்தமிழ் தோன்றிய துணர்த்தும்மாநிலம் வேறானாலும்வாழ்வினைத் தமிழ்வாக் காக்கிநாநிலம் வியக்குமாறுநல்லெமுரியா ஏடு காட்டிடும் நிலைக் கண்ணாடிகவினுடன் உயர்க நன்றேநாட்டிலும் பாட்டாய் மாறிநலம்பல பெருக நீரே!காலம் தொடங்குகையில் முன்னெழுந்த செந்தமிழைஞாலம் பரவச்செய் நல்லோரே! நாளும்உயர்தமிழ்ப் பண்பாடு அங்குக அந்நிலத்தும்செயற்கரிய செய்தீர் சிறந்து.- கோ.பெ.நாராயண சாமி, மேட்டூர் அணை – 636 401பாராட்டும் சீராட்டும் இதழ் பொழுது போக்கு இதழாக இல்லாமல் , நாட்டுக்குத் தேவையான கனமான பொருள்கள் பற்றிய கட்டுரைகளை உள்ளீட்டு பொருளாகக் கொண்டுள்ளதை பாராட்டுகின்றேன். இதழ் பல காலம் வளர சீராட்டுகின்றேன்.- கவிஞர் சக்தி, மூலக்குளம்-605010குருடன் கைத் தடியாய் மாறிடப் பழகடா தரமான தமிழ் இதழ் நடத்துதற்குப் பாராட்டி மகிழ்கிறேன். உலக மயமாக்கலின் உண்மை நுட்பம், இந்தியப் பெருமை, அசோகர் காலம், வேதகாலம் நினைவுகூரல், மாநில ஆளுநரின் மறுப்பக்கம் மட்டுமல்ல முன்பக்கமும் வரலாற்று விளக்கமும் அறிந்தேன். தமிழ் மண்ணில் உலகில் எங்கிருந்தாலும் ஒரு பாமரனும் அறியும் வண்ணம் புள்ளிவிவரங்களுடன், நாட்களுடன் காவிரிநீதி! தமிழண்ணலின் தீபாவலி" ஆய்வு கட்டுரை ஓட்டமும், நடையுமாக எத்தனை அறிவார்ந்த செய்திகள் – தமிழ், தமிழர் பண்பாட்டுடன் அறிவுப் பதிவுகள். இந்த கார்த்திகை இதழின் மலை உச்சிக் கொடி கவிஞர் து. மருதுவின் மரபு கவிதை "குருடன்கைத் தடியாய் மாறிடப் பழகடா" எனும் வரி கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிருக்குச் சமம்"- ஆராவமுதன், கள்ள குறிச்சி-606 202.உரியவருக்குச் சொல்லப்பட்ட அறிவுரை ஆசிரியருக்கு வணக்கம். நான் அருட்செல்வரோடு தமிழிசை விழாவிற்குத் திருச்சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தேன். அவரோடு அமர்ந்திருந்த போது உங்களோடு பேசினேன். அதைத் தற்செயலாகக் கவனித்த அருட்செல்வர், உங்களைப் பற்றி விசாரித்தார். ‘தமிழ் இலெமுரியா’ என்றவுடன் அவருக்கு ஒர் இன்ப அதிர்ச்சி. ஏனெனில், இலெமுரியா அவருக்கு ஓர் ஆய்வு துறை. பூர்வீகத் தமிழனை அதில்தான் அவர் கண்டெடுத்துக் கொண்டாடி வந்தார். அப்போது அவர் ‘அடுத்த முறை மும்பை செல்லும் போது, இலெமுரியாவைச் சந்திப்போம்’ என்று ஆசையோடு கூறினார். ஆனால் அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதை உங்கள் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். இந்த மார்கழி இதழில் ‘பயனில சொல்லாமை நன்று’ என்ற தலையங்கம் தக்க சமயத்தில் உரியவர்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையாகும். - பெ. சிதம்பரநாதன், பொறுப்பாசிரியர் ஓம் சக்தி மாத இதழ், கோவை – 641 002இனி மூத்தகுடி, முதன்மை மொழி கல்வெட்டில் மட்டுமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்னும் மொழியைப் புறக்கணித்து இங்குள்ளோர் கை கோர்த்து உறவு கொண்டாடிய பலனை இப்பொழுது கண் கூடாகப் பார்க்கிறோம். நாயினை குளிக்க வைத்து நடுவீட்டில் வைத்தாலும் அது தன் இயல்பிற்கேற்ப நரகலை நாடித்தான் செல்லும் என்ற நிலையில் ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த பின்பு ஆளும் கட்சி தன் உண்மை முகத்தைக் காட்டுகிறது. வேற்றுமையில் ஒற்றுமையை உருவாகப் பாடுபடும் நிலையில் இன்று ஒற்றுமையை குலைக்கும் வகையில் நடுவண் அரசின் செயல்பாடுகள் அமைந்திருக்கும் தன்மையைத் தலையங்கக் கட்டுரை மிகத் தெளிவாக விளக்குகிறது. எதிர்த்துப் பேசக்கூட எதிர் தரப்பில் ஆள்கள் இல்லாத நிலையை தேர்தலில் செய்த தவற்றைத் தற்போது மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். தில்லியில் அமையும் ஆட்சி எப்பொழுதும் தமிழருக்கு எதிராகவே அமைவதற்குத் தமிழ்நாட்டில் தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததே காரணமாகும். தமிழர்கள் ஒன்று சேர்ந்து செயல்படவில்லை என்றால் மூத்தகுடி, முதன்மை மொழி என்பதெல்லாம் கல்வெட்டில் படிக்கும் நிலையில் தான் அமையும் என்பதை நாம் உணரவேண்டும்- கருமலைதமிழாழன், ஓசூர் – 635 109குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய துணிவு..! தலையங்கம் படித்தேன். தலையங்க வாதத்தில் குற்றம் ஏதேனும் கண்டறிய வேண்டும். என மீண்டும் மீண்டும் படித்தேன்… தோல்விகளைத்தான் சந்திக்க நேர்ந்தது! சமன் செய்து சீர்தூக்குங் கோல் – போல் நின்று, நடுநிலையே இறையாண்மை என்பதை உணர்த்தும் வகையில் தலையங்கம் அமைந்திருந்தது! தேர்தல் களத்தில் நடந்த பேச்சு, ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு போச்சு என்பதையும் அரசியல் சாசனம் அளித்த உத்திரவாதத்திற்குப் புறம்பாக மதசார்பு ஆட்சியாக மாறுவதையும், ஆட்சி மொழிக் கொள்கையில் நடுநிலை தவறிய செயல்பாடுகளையும், தேசிய நூல் தேர்வில், பொதுமறை தவறும் நடுவணரசின் போக்கையும் வரிசையாக சுட்டிக்காட்டி, குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய துணிவும், நுண்ணறிவான்மையும் வரவேற்கத் தக்கது! பாராட்டத்தக்கது!! - துரை.சௌந்தரராசன், காஞ்சிபுரம் – 631 501தமிழர்களின் நெஞ்சப் பிரதிபலிப்பு தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப் பெற்றும் அறிவிப்பளவில் முடங்கிப் போயுள்ளதைச் சுட்டிக் காட்டி, பகவத் கீதையான இந்து சமய நூலை தேசிய நூலாக்க முற்படும் பா.ஜ.க.அரசின் மத வேட்கையைக் கண்டித்தும் இந்தி, சமற்கிருதத்தைத் திணிப்பது இந்திய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் நஞ்சு என எச்சரித்தும் வரையப்பட்டிருந்த தலையங்கம் ஒட்டுமொத்த தமிழர்களின் நெஞ்சப் பிரதிபலிப்பாய் மிளிர்ந்தது. காவிரி நீர் கன்னடத்தாரால் தடுக்கப்பட்டு தமிழர் வஞ்சிக்கப்படுவதை பல புள்ளி விவரங்கள் உண்மையாக்கி அம்பலப் படுத்தின. சீர்வரிசையார் தாம் மும்பையில் செவிமடுத்த தமிழ்ச் சான்றோரின் குரல் ஒலியைப் பட்டியலிட்டிருந்தது அருமை. சமற்கிருத வாரம் கொண்டாடும் வடவரைப் போல தமிழர்கள் தமிழ் வாரம் கொண்டாட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ள கலை வேந்தனின் விழைவு தமிழை வாழ்வியலாக்கப் பெரிதும் உதவும்.- ந.ஞானசேகரன், திருலோக்கி – 609 804அறநெறிப்பட்டவை "பயனில சொல்லாமை நன்று" தலையங்கம் உண்மையாய்வு அறிநெறிப் பட்டதாகும். ஆரிய கலப்பு சமற்கிருதப் பிணைப்பு திராவிடச் சாத்திரப் புரோகிதச் சழக்கினர் பன்னூறு ஆண்டுகளாய் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசி மாந்திரியலை உள்ளூறு வஞ்சகம் சூது சூழ்வு இரண்டகமொடு கெடுத்து அழித்து வருவோரே ஆவர்! அவர்தம் மறுமதிப்பே பா.ஜ.கவும் மோடியும் அவர்தம் அமைச்சரவையும் ஆகும்.- அ.ம.பெ.காவளர் தமிழ்அறிவன், பேட்டைவாய்தலை – 639 112விழிப்புணர்வின் உச்சம் தனிமை இனிமை தருமா? என வினா எழுப்பி அறிவுபூர்வமாக ஆய்வு செய்து, இறுதியில் இனிமை உங்களை நாடி வந்தடையும் என தீர்வு சொல்லி மிகச் சிறப்பாக எழுதியிருந்த கட்டுரையாளர் கே.ஆர்.சிறினிவாசனுக்கு என் இதயபூர்வமான பாராட்டுகள்! அரசியல்வாதிகளின் அடாவடித்தனத்திற்கு ஒரு முடிவு கட்ட, வெகுண்டெழுந்து ஆர்ப்பரிக்கும் கடும் சொற்களை நெருஞ்சி முட்களால் ஆரமாக சரம் தொடுத்து வெளியே வா..! என ஆவேச முழக்கமிட்டு கவிஞர் பூவரசி மறைமலையன் எழுதிய கவிதையில் அனல் தெறித்தது – ஆம் அதுதான் விழிப்புணர்வின் உச்சம்!- ப.இல.பரமசிவம், மதுரை – 625 009காலம் மாறும் ‘தமிழ் இலெமுரியா’வின் தலையங்கம் சிந்தனையைத் தூண்டியது. தமிழ் மொழியும் குணமும் இடர்மிகுந்த காலத்தில் இருப்பது உண்மைதான். காலம் மாறும்; காலம் மாறும் வரை காத்திருப்போம். - க.இந்திரசித்து, உடுமலை – 642126"