வாசகர் மடல்கள் - தமிழ் இலெமுரியா

17 June 2014 9:28 am

கலந்துரையாடல்… தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் மொழியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறையேனும் ஒன்று கூடி கலந்துரையாடி செயல்பட வேண்டுமென்று உணர்த்திய விருந்தும் மருந்தும் தலையங்கத்திற்கு பாராட்டுகள்!எமது செந்தமிழைக் காப்போம்! கற்போம்! கற்பிப்போம்! என்ற கட்டுரையை வெளியிட்டமைக்கு எமது மன்றத்தின் உளமார்ந்த நன்றி.- பெ.சிவசுப்பிரமணியன், சென்னை – 600 081கவரும் வடிவமைப்பு… எப்போதும் கவரும் இதழ் வடிவமைப்பு போலவே, இணையதள வடிவமைப்பும் தமிழ் இலெமுரியாவில் சிறப்பு! பலமுறை சொல்ல நினைத்திருக்கிறேன். இன்று பகிர்ந்து கொள்கிறேன். வாழ்த்துகள்!- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்தமிழர்களின் அடையாளம்… ஈரோடு மாவட்டம் அரியப்பப்பாளையம் எனும் குக்கிராமத்தில் பிறந்து திராவிட கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட குடும்பத்தில் பெண் எடுத்து மகாராட்டிரா மாநில தொழில் வளர்ச்சிக்கு பக்க பலமாக நிற்கும் அன்பழகனை நினைக்கையில் ஒவ்வொரு தமிழனும் பூரிப்பு அடையவே செய்வான். மக்களை ஒன்றுபடுத்தும் ஆயுதமே கலை!" கட்டுரை சுயபரிசோதனைக்கு உட்பட்டது. "பறை" என்கிற இசைக்கருவி தாழ்த்தப்பட்ட மக்களின் குறியீடாக பார்த்ததன் விளைவு சமீபகாலமாக கேரளத்து "செண்டை மேளம்" தமிழக மண்ணில் கால் பதித்துள்ளது. பறையும், ஒப்பாரியும், தாலாட்டும், கும்மியும் தமிழர்களின் அடையாளம் என்பதை உணர வைத்த தமிழ் இலெமுரியா இதழுக்கு நன்றி!- அண்டனூர் சுரா, புதுக்கோட்டை – 613 301தமிழினத்தின் உட்பகை… தமிழினத்தின் உட்பகை தீரா நோயாக இருந்து பல்லாற்றானும் கேடு விளைவிக்கிறது. உலக அளவில் தமிழர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் போலும். பிற இனத்தாரைப் பார்த்த பிறகாவது பெருந்தன்மையை வளர்த்துக் கொண்டு பெருமிதமும் பெருமையும் அடைய வேண்டாவா. அண்டை மாநிலங்களில் நமக்குத் தீராத சண்டை. புதிதாகப் பெறுப்பேற்றுள்ள நடுவண் அரசு இதில் போதிய கவனம் செலுத்தி மாநிலங்களுக்கிடையே இணக்கமான நல்லுறவைப் பேண ஆவன புரிதல் வேண்டும். செய்யுமா? காலம்தான் விடை கூற முடியும்.- முனைவர் கடவூர் மணிமாறன், குளித்தலை – 639 104பாலைவனத்தின் வியப்பு… "பால் சுரக்கும் பாலைவனம்" செய்தி வியக்க வைத்ததோடு மட்டுமன்றி நம் வளத்தை எண்ணி வருத்தப்படவும் வைத்துவிட்டது. "மக்களை ஒன்றுபடுத்தும் கலை" பற்றிய செய்தியும், ஊர்ப்பெயர்கள் கட்டுரையும் தமிழரின் பண்பாட்டிற்கும் பழமைக்கும் சான்றுகளாகும். அண்டனூர் சுராவின் "தமிழச்சி" சிறுகதை நன்றாக இருந்தது.- அ.கருப்பையா, பொன்னமராவதி – 622 407தமிழ் விடுதலைப் போராட்டம்… "தமிழ் இலெமுரியா" மே 2014 இதழ் படித்தேன். நிறைவான பயனுள்ள படைப்புகள். படித்துப் பாதுகாக்கத்தக்க குறிப்புகள், உள்ளத்திற்கு உவகை ஊட்டின. செந்தமிழைக் காப்போம்! கற்போம்! கற்பிப்போம்! எனும் கட்டுரை நன்றாக இருந்தது. உலக நாடுகள் அரங்கில் சிறப்பாகத் தாய்மொழி பேணும் அரசுகளை அழைத்து பாராட்டும் விருதுகளும் தர வேண்டும்! அப்படிச் செய்தாலாவது தமிழர்களுக்குத் தாய்மொழி உணர்வு ஏற்படாதா? இருநூறு ஆண்டுகள் போராடித்தான் இந்திய விடுதலை வந்தது. தமிழ் விடுதலையும் போராடித்தான் பெற வேண்டும்.- க.அ.பிரகாசம், கொடுமுடி – 638 151தமிழ், தமிழர் பண்பாடு… மகாராட்டிரா மாநிலத்திலிருந்து இப்படி ஒரு இதழா? வியக்க வைக்கின்றது. தமிழ் தமிழர் பண்பாடு காக்கும் வகையில் அருமையான படைப்புகளைக் கொண்டு வந்துள்ள "தமிழ் இலெமுரியா" இதழை இதுகாறும் படிக்க வாய்ப்பு கிட்டவில்லையே என வேதனைப்பட்டேன். "மண்ணின் மாண்பும் மரங்களின் மாட்சியும்" அருமையான கட்டுரை- நிலவன், சென்னை – 600 017காயிதே மில்லத்தின் தமிழுணர்வு… வைகாசித் திங்கள் இதழ் வாசித்தேன். இதழில் வெளியிடப்பட்டுள்ள அனைத்துக் கட்டுரைகளும் மனித இன வளர்ச்சிக்கும், இயற்கையின் பாதுகாப்பிற்கும் தேவையான ஒன்றாகும். முதல் பக்கம் வெளியான து.மருதுவன் கவிதை இன்றைய எதார்த்த நிலையை எடுத்துக் காட்டியது. காயிதே மில்லத்தின் தமிழுணர்வு போற்றப்பட வேண்டும். கண்ணகி கலைவேந்தனின் "அவ்வையின் அறநெறிகள்" அழியாத கருத்துக் கருவூலமாகும்.- காரை இரவீந்திரன், பீவண்டி – 421 302"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி