17 November 2014 12:04 pm
இந்தியப் பேனா நண்பர் பேரவையின் சார்பாக உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற கல்கண்டு இதழின் ஆசிரியர் லேனா தமிழ்வாணன் மற்றும் மகாராட்டிரா மாநில தேர்தலில் வெற்று பெற்று சட்டமன்ற உறுப்பினராகியுள்ள கேப்டன் இரா.தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு இந்தியப் பேனா நண்பர் பேரவையின் புரவலர் ம.ஸ்டான்லி தலைமையேற்றார். இந்தியப் பேனா நண்பர் பேரவைத் தலைவர் மா.கருண் வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் ஆ.பி.சுரேசு, வருமான வரித்துறை ஆணையர் வீ.மகாலிங்கம், தென்னிந்திய ஆதி திராவிடர் மகாசன சங்கத் தலைவர் கா.வ.அசோக்குமார், ஆர்.எஸ்.மணி பேரங்காடி நிருவாக இயக்குனர் ஆர்.எஸ்.மணி, பாண்டூப் தமிழ்ச் சங்கம் எஸ்.எஸ்.தாசன், திருவள்ளுவர் தமிழ்ச் சங்க சி.அங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லேனா தமிழ்வாணன், தமிழ்ச் செல்வன் ஆகியோர் பணிகளைப் பாராட்டி, ஆதித்திய ஜோத் கண் மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் பத்மசிறி சு.நடராசன், தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மராத்திய முரசு நாளிதழ் மேலாளர் ச.ஞா.பிரபாகரன், மும்பைத் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் வெ.பாலு, லேனா தமிழ்வாணனின் நண்பர் ஆ.சி.ஜெகநாதன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். இறுதியாக லேனா தமிழ்வாணன், கேப்டன் தமிழ்ச் செல்வன் ஆகியோர் ஏற்புரையாக சிறப்புரையாற்றினர்.