15 July 2014 4:59 am
மும்பைப் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும், தமிழ் இலெமுரியா குழுமத் தோழர் அ.இரவிச்சந்திரனின் தந்தையுமான எஸ்.எஸ்.அன்பழகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் காலமானார். அவருடைய படத் திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் மும்பை மாதுங்கா குசராத் சாமஜ் அரங்கில் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எஸ்.எஸ்.அன்பழகன் படத்தை திறந்து வைத்து நினைவுரை ஆற்றினார். இந்நினைவேந்தல் நிகழ்ச்சியில் மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன், நெல்லை திராவிடர் கழக தலைவர் காசி, செயற்குழு உறுப்பினர் பார்வதி அம்மாள், மும்பை புறநகர் திமுக அவைத் தலைவர் கொ.வள்ளுவன், பேராசிரியர் சமீரா மீரான், வதிலை பிரதாபன், தமிழ் இலெமுரியா ஆசிரியர் சு.குமணராசன், கவிஞர் புதிய மாதவி, பாவலர் முகவைத் திருநாதன், ஆர்.பரமசிவம், டி.ஏ.வான்மதி, புலவர் இரா.பெ.பெருமாள், மும்பை திமுக இளைஞரணி அமைப்பாளர் மா.சேசுராசு, கரூர் இரா.பழனிச்சாமி, வ.இரா.தமிழ்நேசன், க.ஆறுமுகப் பாண்டியன், சங்கர், கொ.சீனிவாசகம், ஜான் சாமுவேல், பி.கே.இராஜேந்திரன், காரை இரவீந்திரன், கே.வி.அசோக்குமார், பி.கிருஷ்ணன், ந.வசந்தகுமார், ப.சங்கர் நயினார், நங்கை குமணன், இரா.சரவணன், அந்தோணி, கண்ணன், சசிகுமார், ரஜினி ரவி, டி.கே.சந்திரன், கவிஞர் குணா, ராஜா உடையார், செ.அப்பாதுரை, தேவராஜன், சிவ.நல்லசேகரன், ம.கதிரவன், தா.செ.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எஸ்.எஸ்.அன்பழகன் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர். மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் செயலாளர் அ.இரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.