11 January 2015 5:55 pm
மும்பை சயான் கோலிவாடா பகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு பெற்ற தமிழர் கேப்டன் இரா.தமிழ்ச் செல்வனுக்கு தமிழர் நலக் கூட்டமைப்பு சார்பாக செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் பாராட்டு விழா நடத்தப் பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பூனே, பாலாஜி சொசைட்டியின் தலைவர் முனைவர் கர்னல் அ.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எஸ்.ஐ.இ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் வி.சங்கர், வருமான வரித்துறை ஆணையர் வி.மகாலிங்கம், நேஷனல் கல்விக் குழுமத் தலைவர் ஆர்.வரதராசன், பம்பாய் திருவள்ளுவர் மன்றச் செயலாளர் வி.தேவதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த கராத்தே முருகன் விழாவை நெறியாள்கை செய்தார். தமிழர் நலக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மா.கருண் வரவேற்புரையும் தமிழ் இலெமுரியா" இதழின் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் தொடக்கவுரையும் நிகழ்த்தினர். தருண் பாரத் சேவா சங்கத் தலைவர் ச.இராசேந்திரன் சுவாமி, ஏ.பி.மணி – சன்ஸ் இயக்குநர் ஆ.பி.சுரேசு, மராத்திய மாநில அ.தி.மு.க. அமைப்பாளர் கே.எஸ்.சோமசுந்தரம், நவிமும்பை தமிழ்ச் சங்க தலைவர் என்.மகாதேவன், திருவள்ளுவர் தமிழ்ச் சங்க செயலாளர் செ.அங்கப்பன், கவிஞர் புதியமாதவி, மராத்திய முரசு மேலாளர் ச.ஞா.பிரபாகரன், விரார் தமிழ்ச் சங்க தலைவர் எஸ்.சுயம்பு, மும்பை பா.ஜ.க.தமிழ் பிரிவின் தலைவர் ராஜா உடையார், ஆல்வின் தாஸ், தென்னிந்திய ஆதி திராவிரடர் மாகாஜன சங்கத் தலைவர் கா.வ.அசோக் குமார், மும்பை யாதவ மகாசபை தலைவர் ஈ.இலட்சுமணன், வழக்குரைஞர் ப.சுப்புலட்சுமி, மும்பை மாநகராட்சி தமிழாசிரியர் குழுமத் தலைவர் திருமதி அனிதா டேவிட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக மராத்திய மாநில சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் இரா.தமிழ்ச் செல்வன் ஏற்புரை வழங்கினார். விழாவின் நிறைவாக தமிழர் நலக் கூட்டமைப்பின் செயலாளர் வெ.குமார் நன்றியுரை கூறினார். விழாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்."