18 May 2014 7:53 am
மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக ஆவணப்பட திரையிடல், நூல் வெளியீட்டு விழா மும்பை தாராவி, கம்பன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோழர் லீனா மணிமேகலை இயக்கிய ‘White Van Stories’ எனும் ஆவணப்படமும் ‘This land belongs to the army’ எனும் ஆவணப்படமும் திரையிடப் பட்டது. பின்னர் ஜெ.பிரபாகரன் எழுதிய பொது சன வாக்கெடுப்பு" (ஈழ விடுதலைக்கான ஒரு அரசியல் பாதை) மற்றும் "அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" என்கிற இரு நூல்களும் வெளியிடப்பட்டது. இவ்விரு நூல்களையும் தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் வெளியிட்டார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக மராட்டிய மாநில எழுத்தாளர் கவிஞர் புதிய மாதவி, சங்கர நயினார், அம்பர்நாத் கதிர்வேல், டோம்பிவிலி திருநாவுக்கரசு, காரை இரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை மும்பை விழித்தெழு இயக்கம் சிரிதர், பிரான்ஸிஸ் ஆகியோர் செய்திருந்தனர்."