16 August 2014 10:56 am
தமிழர் நட்புறவுப் பேரவையின் 13வது ஆண்டு நட்பு தின விழா மும்பை, செம்பூர், காமராசர் அரங்கில் நடைபெற்றது. முன்னாள் மும்பை நகர்மன்ற உறுப்பினர் வேலுச்சாமி, நவிமும்பைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கி.இராசகோபால், வழக்கறிஞர் இர.இராசாமணி, தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேரா. சமீரா மீரான், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிசந்திரன், மும்பை டி.எம்.எஸ். நரசிம்மன், டி.கே. சந்திரன், கொ.வள்ளுவன், பி.கிருட்டிணன், கிங்பெல், வதிலை பிரதாபன், த.செ.குமார் உள்ளிட்ட ஏராளமான தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டு நட்பு தின வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். விழாவை நட்புறவுக் கழக அமைப்பாளர் கவிஞர் குணா ஒருங்கிணைத்திருந்தார்.