நூற்றாண்டு விழா - தமிழ் இலெமுரியா

15 October 2015 2:50 pm

கவிக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா மும்பை சண்முகானந்தா சங்கீத சபா சார்பில் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இவ்விழாவில் மராத்திய மாநில ஆளுநர் வித்யாசாகர், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் கி.எஸ்.எல். நரசிம்மன், மராத்திய மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், மராத்திய மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச் செல்வன் உட்பட இயல், இசை, நாடகத் துறையின் முன்னோடிகள் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் குறும்படம் மற்றும் அவருடைய சாதனை விளக்கக் கண்காட்சி ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழா நினைவாக இந்திய அரசின் சார்பில் அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமி சங்கீத பிரச்சார்ய சிறப்பு விருதுகள் வித்வான்கள் கே.வி.பிரசாத், ஆர்.கே.சிறிராம் குமார், டாக்டர் டி.கே.மூர்த்தி, திருமதி ராதா விசுவநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இது தவிர 50 இளம் கலைஞர்களும் விழாவில் பாராட்டப் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சண்முகானந்தா சங்கீதா சபா மற்றும் தென்னிந்திய கல்விக் கழகத்தின் தலைவருமான டாக்டர் வி.சங்கர் மிக நேர்த்தியான முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு நான்கு நாட்கள் நடைபெற்ற இப்பெருவிழாவைச் சிறப்பித்தனர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி