9 October 2013 11:47 pm
மும்பையிலுள்ள திருவள்ளுவர் மன்றம் சார்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாட்களைப் போற்றும் வகையில் முப்பெரும் விழா கொண்டாடப் பெற்றது. அண்ணா பிறந்த நாள் விழாவில் திருவள்ளுவர் மன்ற செயலாளர் வி.தேவதாசன் தலைமையேற்க, சு.குமணராசன், அலிசேக் மீரான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காமராசர் பிறந்த நாள் விழா நிகழ்வில் பிரைட் உயர்நிலைப் பள்ளி முதல்வர் திருமதி செலின் ஜேக்கப் தலைமையேற்க திரு.எஸ்.அண்ணாமலை, கவிஞர் செந்தூர் நாகராசன், கேப்டன் தமிழ்ச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிறைவு விழாவாக நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு என்.பாக்கியநாதன் தலைமையேற்க, திரு த.மு.ஆரிய சங்காரன் பெரியார் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். எஸ்.ஜி. பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினர். அறிஞர்கள் போற்றும் அறிஞர்", காலம் தந்த காமராசர், பெரியார் என்றும் பெரியார் என்ற தலைப்புகளில் மூன்று விழாக்களிலும், மாநிலக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன் கலந்து கொண்டு விழாப் பேருரை ஆற்றினார். இந்நிகழ்வையொட்டி திருவள்ளுவர் மன்றத்தின் அறக்கட்டளை சார்பில் தந்தை பெரியார் விருது மும்பையின் மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன், பேரறிஞர் அண்ணா விருது திரு எஸ்.இரவீந்திரன், பெருந்தலைவர் காமராசர் விருது ஆசிரியர் இர.இராசமணி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விருது நெல்லை வளவன், முத்தமிழ்க் காவலர் விருது கி.இராசகோபால் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு விருதுகளும், பண முடிப்பும் வழங்கப்பட்டது. இந்தியப் பேனா நண்பர் பேரவை தலைவர் மா.கருண் விழா நிகழ்ச்சிகள் நெறியாள்கை செய்தார். இரண்டு நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் திரு ஏ.இராமராசா, எஸ்.ஸ்டீபன் எடிசன், எம்.செல்வராசு, சி.அங்கப்பன், எம்.இராமலிங்கம், ஈ.குமார செல்வன், பூமாரி, இராமன், இராச இளங்கோ, பால்வண்ணன், ஜான் சாமுவேல், மனோகரன், அமுதா செல்வன், ஜேம்ஸ் தேவதாசன், பல்வேறு தமிழ்ச் சங்க நிருவாகிகள் சி.சேகர், வி.குமார், சுயம்பு, சேவியர் இராசன், இல.இராசன் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்."