மரக் கன்றுகள் நடுகை - தமிழ் இலெமுரியா

15 July 2014 4:56 am

இயற்கை, ஒற்றுமை, செழுமை என்கிற கோட்பாட்டை முதன்மையாகக் கொண்டு இயற்கை வளம் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் பொருட்டு செயலாற்றி வரும் தமிழ்ச் சங்கமம்", இலெமுரியா அறக்கட்டளை, விழித்தெழு இயக்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் பசுமை வளர்ச்சியைப் பேணும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.  மும்பை-நாசிக் நெடுஞ்சாலை அருகேயுள்ள பாவாலே லோனாடு காட்டுப்பகுதியில் சற்றொப்ப 1, 000 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு வகையான மரக்கன்றுகள் காடுகளின் வளம் பாதுகாக்கும் வகையில் நடுவை செய்யப் பட்டது. நிகழ்ச்சியில் இலெமுரியா அறக்கட்டளை தலைவர் சு.குமணராசன், நங்கை குமணன், விழித்தெழு இளைஞர் இயக்கச் செயலாளர் சிறிதர் துரை சுந்தரம், தமிழ்ச் சங்கமம் பாஸ்கர் மனோகரன், காளிதாசு ஆறுமுகம், ரூபேசு மார்க்லின், ஹரிகிருஷ்ணன் பெருமாள், சேவியர் அருளப்பன், வெங்கடேசு, தமிழ்மணி பாலா, காத்தவராயன், செந்தில், இராஜலட்சுமி, சதீசு, ரேணுகா வரதராஜன், மயில் ஜோதி, குரு சாந்தி, திருவேங்கட மணி உட்பட சற்றொப்ப நூறு இயற்கை ஆர்வலர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி