மராத்திய மாநில அமைச்சர் புஜ்பாலுக்கு சமூக நீதி விருது - தமிழ் இலெமுரியா

14 February 2014 9:30 am

அமெரிக்காவில் இயங்கி வரும் தந்தை பெரியார் பன்னாட்டு மையம் சார்பில் நடத்தப்பெற்ற கி.வீரமணி சமுக நீதி விருது 2013" விழா மும்பை இரவீந்திர நாட்டிய மந்திர் கலையரங்கில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக மராத்திய மாநில ஆளுநர் கே.சங்கர நாராயணன் கலந்து கொண்டு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். மாராத்திய மாநில பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜகன் புஜ்பாலுக்கு அவரது சமுகச் சேவையைப் பாராட்டி "கி.வீரமணி சமுக நீதி விருது" வழங்கப்பட்டது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்க, பெரியார் பன்னாட்டு மைய நிருவாக இயக்குனர் டாக்டர் இளங்கோவன் வரவேற்புரையாற்றினார். விழாவில் கி.வீரமணி அமைச்சர் புஜ்பால் ஆகியோர் உரையாற்றினர். மராத்திய மாநில கூடுதல் செயலாளர் பொன்.அன்பழகன் ஐ.ஏ.எஸ் நன்றியுரையற்றினார். மறுநாள் மும்பை திராவிட கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 135வது பிறந்தநாள் விழா, பொங்கல் விழா மும்பை மைசூர் அசோசியேசன் அரங்கில் நடைபெற்றது. விழாவில் மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்ற, பெரியார் படத்தை சீர்வரிசை சண்முகராசன் திறந்து வைத்தார். மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் தொடக்கவுரையாற்ற, சோம.இளங்கோவன், குமரேசன், சு.குமணராசன், அலிசேக் மீரான், சமீரா மீரான் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். ஜே.வில்சன் நன்றியுரையாற்றினார்."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி