மும்பைத் தமிழன் இணையதளத்தின் இணைய விழா - தமிழ் இலெமுரியா

14 February 2014 9:29 am

மும்பைத் தமிழன் இணையதளத்தின் இணைய விழா மும்பை பாண்டூப்பிலுள்ள நேசனல் எஜூகேசன் சொடைட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நேசனல் எஜூகேசன் சொசைட்டி தலைவர் டாக்டர் இரா.வரதராசன் தலைமை தாங்கினர். தெட்சணமாற நாடார் சங்கத்தின் மும்பை கிளை தலைவர் ஏ.ராமராஜா, புனே பிம்பரி-சின்ச்வர்ட் மாநகராட்சியின் மேனாள் மேயர் ஆர்.எஸ்.குமார், மராத்திய மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.அண்ணாமலை, மராத்திய மாநில தமிழர் கூட்டமைப்பு தலைவர் கேப்டன் தமிழ்செல்வன், பூனே காமராசர் நற்பணி மன்றத் தலைவர் டி.கிறிஸ்டோபர், ஆதித்ய ஜோதி கண் மருத்துவமணை நிருவாக இயக்குனர் டாக்டர் சு.நடராசன், யாதவ மகாசபை தலைவர் இ.லெட்சுமணன், புறநகர் தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இராஜா இளங்கோ வரவேற்புரையாற்ற, அவனி எஸ்.மாடசாமி தொடக்கவுரை ஆற்றினர். கவிஞர் செந்தூர் நாகராசன் இணையதள அறிமுக உரையாற்றினார். சு.குமணராசன், மா.கருண், ஏ.பி.சுரேஷ், சமீரா மீரான், ஆறுமுகப் பாண்டியன், ராமசாமி, திருமதி மீனாட்சி முத்துகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் காசிலிங்கம், சேதுராமன், சாத்தப்பன், ஆல்பர்ட், ஜான்சுந்தர், சி.அப்பாதுரை,கிங்க்பெல், அ.கணேசன், வி.குமார், சி.இராஜையன், இ.முத்து, சி.சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நிகழ்ச்சிகளை துளசி எட்வின் தொகுத்து வழங்கினார். செந்தூர் நாகராசன், ஜேக்கப்தாசன், மாயாண்டி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். இறுதியில் மும்பைத் தமிழன் இணையதள குழுமத்தின் நிருவாக இயக்குனர் மந்திர மூர்த்தி நன்றி கூறினார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி