14 February 2014 9:27 am
மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் பவளவிழாவையொட்டி சிறப்பு நிகழ்வாக மும்பை, சயான் பகுதியில் அமைந்துள்ள தமிழ்ச் சங்க அரங்கில் சிறப்புக் கவியரங்கம்" நடைபெற்றது. வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் கவிமாமணி அப்துல் காதர் தலைமை வகித்தார். "பூ என்ன சொல்கிறது" எனும் கருப்பொருளை முன் வைத்து "மண்ணின் மடியில்" எனும் பொருளில் கவிஞர் மானசீகன், தேசியக் கொடியில் எனும் பொருளில் கவிஞர் நெல்லை ஜெயந்தா, காதலி முடியில் எனும் பெயரில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி, தெய்வத்தின் அடியில் என்ற பொருளில் பாடலாசிரியர் நந்தலாலா ஆகியோர் மிகச் சிறப்பாக கவிதை பாடினர். நிகழ்வுக்கு தமிழ்ச்சங்கத் துணை தலைவர் கண்ணன் வரவேற்புரையாற்ற, செயலாளர் மிக்கேல் அந்தோணி தொடக்கவுரையாற்றினார். கவிஞர் மெய்யப்பன் அறிருகக் கவிதைகளை பாடினார். இறுதியில் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் வெ.பாலு நன்றியுரையாற்றினார். ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்."