17 June 2014 9:49 am
மகாராட்டிரா மாநிலத்தில் திராவிட இயக்கத்தின் ஒரு பெருந் தூணாகவும், இளமையிலிருந்து தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரிடம் நெருக்கமாகப் பழகியவரும், மும்பையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளராகவும் பணியாற்றி வந்த திரு த.மு.பொற்கோ அவர்கள் தனது 83வது வயதில் 10.06.2014 அன்று (இந்த இதழ் அச்சேறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு) காலையில் திடீர் மறைவெய்தினார் என்ற செய்தி தமிழினத்திற்குப் பெரும் இழப்பை அளிப்பதாகும். 1974 ஆம் ஆண்டு மும்பையில் திரு த.மு.பொற்கோ அவர்களை முதன் முதலாகச் சந்தித்தது முதல் இன்று வரை தமிழ், தமிழர் இனம் சார்ந்த அரசியல், சமூக, இலக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள் என அனைத்தும் அவரோடு பங்கு கொண்டு இணைந்து பணியாற்றிய நிகழ்வுகள் எம்மை செம்மைப் படுத்தியுள்ளன. அவருடைய ஆழ்ந்த தமிழ் அறிவும், இலக்கியப் புலமையும் எண்ணற்ற எழுத்தாளர்களை சொற்பொழிவாளர்களை மும்பையில் உருவாக்கியுள்ளது. யாமும் அவ்வாறு வளர்ச்சி பெற்றவர்களே என்பது மெய்யாகும். அவரை இழந்து வாழும் வாழ்விணையர் மற்றும் புதல்வர்கள் அன்பழகன், வளர்மதி செல்வம் ஆகியோருக்கும் திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகளுக்கும் எம் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வாழ்க த.மு.பொற்கோ புகழ்! – சு.குமணராசன் முதன்மை ஆசிரியர்.