கச்சத் தீவு மீட்பு குறித்த கருத்தரங்கம் - தமிழ் இலெமுரியா

27 July 2013 4:04 pm

கச்சத் தீவு மீட்பு குறித்த கருத்தரங்கம்

கச்சத் தீவு மீட்பு விளக்கக் கருத்தரங்கம், நூல்கள் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி மகாராட்டிரா மாநிலம் நவிமும்பைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. முத்தமிழ் மன்ற அமைப்பாளர் அ.கணேசன் வரவேற்புரையாற்றினார். “தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் தலைமையில் நடபெற்றக் கருத்தரங்கில் மும்பை மாநகராட்சி மன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச் செல்வன், நவிமும்பை தமிழ்ச் சங்கத் தலைவர்கள் பால கிருட்டிணனன், கி.இராச கோபாலன், தொழிலதிபர் ஏ.பி.சுரேசு, பாண்டூப் தமிழ்ச் சங்கச் செயலாளர் பழனி, முத்தமிழ் தண்டபாணி, சண்முகம் உள்ளிட்டத் தோழர்கள் கருத்துரை வழங்கினார். கச்சத் தீவு கூட்டு நடவடிக்கைக் குழுவின் அமைப்பாளர் சீதையின் மைந்தன் விரிவாகச் சிறப்புரையாற்றினார். விழாவில் கச்சத்தீவு மீட்பு குறித்து தமிழ், ஆங்கில நூல்களும், குருந்தகடும் வெளியிடப்பட்டன. கலினா தமிழ்ச் சங்கத் தலைவர் அங்கப்பன் வெளியிட செல்லதங்க அறக்கட்டளை நிறுவனர் செ.அப்பாத்துரை பெற்றுக் கொண்டார். மராத்தி தமிழ்ச் சங்க நிறுவனர் ப.க.சிவபரிதி நன்றியுரையாற்ற, நெல்லை நாதன் நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி