15 December 2015 5:31 pm
எழுத்தாளர் உரிமையெல்லாம் பறிக்கப் பட்டுஎழுத்தாளர் கைகளையே கட்டு கின்றார்எழுத்தாளர் எல்லாரும் அரசை நோக்கிஎதிர்ப்பினையே தெரிவிக்க பயந்து கொண்டுவிழுகின்றார் ஆட்சியரின் கோபத் தீயில்;விதைக்கின்ற மதவாத கருத்தை நீக்கஎழுந்துநின்று அச்சமின்றி எழுது கோலால்எதிர்ப்பினையே ஆட்சியருக்கு உணர்த்த வேண்டும்!பகுத்தறிவுக் கருத்துக்கள் பரப்பி வந்தபண்பாளர் ‘கல்புர்கி’ கொல்லப் பட்டார்,வகுத்திட்ட சட்டதிட்டம் தகர்க்கப் பட்டுவடுக்களாய் மரணத்தை தந்தார், ஆளத்தகுதியில்லா ஆட்சியாளர் கொள்கை யெல்லாம் தரமற்று போனதினால் அறிஞர் எல்லாம்தகுதிமிக்க விருதுகளைத் திருப்பித் தந்தார்!திரண்டெழுந்து ஆட்சியரை எதிர்க்க வாரீர்!மாட்டிறைச்சி உண்பவரின் தலையை வெட்டிமண்ணுக்குள் வீசிடுவேன் என்று கூறும்மேட்டுக்குடி மக்களை தூண்டி விட்டுமதவாதக் கொள்கைகளை பரப்பு கின்றார்,நாட்டின் பிரதமரோ பதிலே இல்லை!நீளுகின்ற மதவெறியை ஒழித்துக் கட்டகூட்டாக எழுத்தாளர் இணைந்து நின்று கொடுமைதனை எதிர்நின்று வெற்றி காண்போம்!- கவிஞர் குமார சுப்பிரமணியன், நெல்லை