அணையாச் சுடர் முத்துலட்சுமி அன்னையார் - தமிழ் இலெமுரியா

15 July 2014 4:01 am

பெண்கல்வி தானிந்த நாடு விடுதலை பெற்றிடும் ஆணிவே ராகும் – ஓங்கிப்  பற்றிடும் கல்வியின் சாரம் – இதைஎண்பித்த நம்முதல் பெண்ணின மருத்துவர் எம்முத்து லட்சுமி எனும்தாய் – பதிணெண் எண்பத்தா றாமாண்டு உதித்தார்.நாராயண சாமி என்னும் அறிஞரெம் நாட்டினி லோர்தவப் புதல்வர் – புதுக் கோட்டைக்கல் லூரியின் முதல்வர் – அவர்ஆராதனை செய்து ஈன்ற முதல்மகள் ஆசியா போற்றிட ஒளிர்ந்தார் – தேவ தாசி முறைதனை ஒழித்தார்.ஆடவர் கல்லூரி சென்றமுதல் பெண்ணாய் ஆணாதிக்கம் தன்னை உடைத்தார் – பெரும்  தூணாகப் பெண்துயர் துடைத்தார் – தமிழ்நாடாளுமன்ற உறுப்பின ராகிப் பின் மேலவைத் தலைமை ஏற்றார் – பல ஏழைநலத் திட்டம் போட்டார்.இல்லற வாழ்விலே சுந்தர ரெட்டியார்க் கேற்ற மனை விளக் கானார் – பார் போற்றுமீர் பிள்ளைக ளீன்றார் – ஏழைநல்லுற வெய்திடப் பெண்கள் கழகத்தை நாட்டித் தலைமையை ஏற்றார் – அதன் ஏட்டின் முழுபொறுப் பேற்றார்.பெண்ணினம் உய்வுறப் பாலர்கல் யாணத்தைப் பிடிவாத மாகவே எதிர்த்தார் – கைம்பெண் கொடிய துயரினை அழித்தார் – காந்திஅண்ணல் பெரியாரும் போற்றத்ததம் இல்லத்தை அநாதை நலனுக்காய்ப் பகிர்ந்தார் – புகழ் அணையாச் சுடராக ஒளிர்ந்தார்.- குடந்தை பரிபூரணம்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி