14 February 2014 9:21 am
அண்ணாஎனும் அன்பே உன்உரை தேன்என்பேன்!அண்ணாஎனும் அறிவே உன்எழுத்து பால்என்பேன்!அண்ணாஎனும் அருளே உன்நடை ஆறுஎன்பேன்!அண்ணாஎனும் அமிழ்தே உன்உருவம் குறள்என்பேன்!தேர்ந்த தமிழில் சுயமரி யாதைஆர்ந்த மக்களும் அறிஞரும் திளைக்கவார்ந்த ஆற்றுநீர் போல்தன் படைப்புகள்சேர்ந்த தம்பியர்க்காய் கடிதமும் தந்தனை!தம்பிவா தலைமை ஏற்றிட வாவெனத்தம்பியரை அழைத்துப் போற்றிய தலைவன்நீ!எம்பிஎம்பி உரத்தகுரல் எடுத்தும்கை யசைத்தும்செம்பாகம் உரையாற்ற வாழ்த்தும் நெஞ்சினன்!மாலைமணி காஞ்சி திராவிட நாடென்னும்கோலமொழி விடுதலை போர்வாள் இதழ்களைக்காலத்தால் அழியா நம்நாடு இதழ்போலசீலத்தால் எண்ணிச் சீராய் வளர்த்தவன்நீ!குணமது வாகிய சாதிகள் களையும்மணமது நடந்தவை சட்டத்தால் காத்தவன்!தனமது போக்கி மனிதம் அழித்திடும்இனமது ஒழிந்திடச் சட்டம் வகுத்தவன்!பழமைக்குப் பயணச்சீட் டளித்துப் பதுமையாம்பழமையை வாவென் றழைத்தவன்! வருந்தும்ஏழையர் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்!தோழமை கொண்டுயர் தலைவரைப் போற்றினை!திருமூலர் சொல்லாம் ஒன்றே குலமும்ஒருவனே தேவனென் றுலகுக்குச் சொன்னவன்!வருபகை கூட்டி வைதவர் தமையலாம்திருவுடன் வாழ்கவச வாளர் என்றனைநீ!வெண்கதிர் உலவிடும் நாள்வரை உன்பெயர்தண்ணிலவு பொழிகின்ற நாள்வரை உன்பெயர்மண்ணினில் செந்தமிழ் திகழ்வரை உன்பெயர்எண்ணிறந் தாண்டுகள் நின்றிடும்! நின்றிடும்!!- புலவர் சி.சுவாமிநாதன், பந்தநல்லூர்.