அறிஞர் அண்ணா வாழ்க! - தமிழ் இலெமுரியா

15 September 2014 6:04 am

காஞ்சிதன்னில் தோன்றினாரே கடமை வீரர்கண்ணியவான் அறிஞரண்ணா ஆவார்! மக்கள்பூஞ்சோலைத் தமிழுக்குப் பெருமை சேர்த்து பூத்தொளிரும் ஆட்சிதன்னை அன்று செய்தார்!தேஞ்சோலை இவர்பேச்சு எழுத்து எல்லாம்தெவிட்டாது தமிழன்பர் உள்ளம் என்றும்!மாஞ்சோலைத் தம்பிக்குக் கடிதத் தாலேமதிப்புமிகு செல்வாக்கும் பெற்றார் அண்ணா!அரிசிபஞ்சம் தீர்த்துவைத்தார் அறிஞர் அண்ணாஅன்புகொண்ட மாநிலத்தில் பெயரை மாற்றிபெரியோர்கள் கண்டகனவு நனவே ஆகபெருமையாய்த் தமிழ்நாடு எனப்பேர் வைத்தார்!சிரித்துவாழும் ஏழையின் வாழ்வு தன்னில்சீராக இறைவனைத்தாம் காண்பேன் என்றார்புரிந்துணர்ந்து எழுதிவைத்த இவரின் நூல்கள்புத்துலகை உருவாக்கும் படைப்பு ஆகும்!தமிழகத்தில் செந்தமிழ்மா நாடு கண்டுதரணிபுகழ் நிலைக்கத்தான் செய்தார் அன்று!அமிழ்தெனவே நம்மொழியை ஆன்றோர் எல்லாம்அற்றைநாள் வாழ்த்தியேற்கச் செய்தார் அண்ணா!இமியளவும் சோராமல் தமிழை நாளும்இவ்வுலகில் காத்தாரே அறிஞர் அண்ணா!நிமிருமாறு மக்களுக்கு ஊக்கந் தந்துநிம்மதியாய் வாழவகை செய்தார் அண்ணா!சீர்திருத்தத் திருமணங்கள் தமிழ கத்தில்சீரோடும் சிறப்போடும் செய்து வைத்தார்!ஊர்ஊராய் வலம்வந்து கொள்கை தன்னைஊன்றுகோலாய் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்!ஏர்உழவர் வாழ்க்கைக்கு ஏற்றம் தந்தார்எதிர்ப்போரை நண்பராக்கி ஆட்சி செய்தார்!தேர்ந்தநல்ல அறிஞர்தாம் அண்ணா என்றும்தென்னாட்டு காந்திதானே அறிஞர் அண்ணா! -மயில் இளந்திரையன், கோவை.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி