15 March 2014 7:13 am
இரண்டடி நடந்தால் இருமினேன்! பொருமினேன்!உருண்டது வியர்வை! இருண்டன கண்கள்!மும்முறை விழுந்தேன்; மூலையில் கிடக்கவா?அம்மா என்றேன்! அவள்போய் மறைந்தாள்!இன்னுமா அழைத்தாய்?" எழுப்பினால் மனக்குரல்!அன்னையே! இங்கே யாரைநான் அழைப்பேன்?உண்ணவும் உடுத்தவும் உன்னால் கற்றவன்!எண்ணவும் எழுதவும் என்னைநீ வளர்த்தனை!தின்றால் எதுவும் செரிப்ப தில்லை;சொன்னால் கூடத் தொடர்ந்து கொடுத்தார்!அடிக்கடி கழிப்பறை அழைக்கும் நெருக்கடி!இடிக்கிற வானம் இடிப்பது போல!கடிக்கிற நாயைக் கட்டிவைப் பார்கள்துடிக்கிற வாய்க்கு தூண்டிலா உண்டு?விழுங்கினால் தொல்லை! விலக்கினும் தொல்லை!அழுங்குரல் கேட்கும் அடிவயிற் றுக்குள்!நரைத்த தலையோ நடுங்கும்! வாழ்வில்கரைத்த இளமை கனவில் தோன்றும்!குதிரைப் பாய்ச்சல்; குரங்கின் சேட்டைமுதலை மூர்க்கம் முழுவதும் போயின!கடைவாய் எச்சில் மடைவாய் ஆகிநடைபோய்த் தேய்ந்து நான்கிடந் தேனே!என்செவி கேட்க இனிக்கும் தமிழ்ப்பாஒன்றோ இரண்டோ ஓது வீரே! – முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்."