11 September 2013 12:00 am
இயற்கையினை துணை கொள்ள, மனிதன் கண்ட இணையற்ற கருவிதான், அறிவு! வாழ்வில்பயனுள்ள செய்கைக்கும் அதுவே துணையாகும்! பண்பாட்டுச் செழிப்பிற்கு, ஏணிப் படிகள்உயர்வான சிந்தனையின் தொகுப்பேயாகும்! உலகத்தில் அறிவியலின் துவக்கம், அறிவின்வியர்வையிலே தோன்றியதே! ஆய்ந்தால், மனித விடியலுக்கும் மெய்யறிவே ஆணிவேராம்!மெய்ப்பொருளை இழந்துவிடின் வாழ்க்கை ஏது? மின்னொளியும் கணிப்பொறியும் அறிவின் கொடையே!பொய்களையும் புரட்டினையும் நம்பி, மனிதன் பொய்முகத்தைப் பின்தொடர்ந்தால் அழிவே மிஞ்சும்!நெய்மணக்கும் பொங்கலைப்போல, அறிவின் வழியில் நேர்மையுடன் உழைப்போரை வெற்றி தழுவும்!அய்யாபோல் ஆழமாய் சிந்தித்தாலோ அகிலத்தில் அறியாமை அடியோடழியும்!தேய்பிறையாம் அறியாமை வாழ்வை விழுங்கும்! தேயாத செங்கதிராய் ஒளியைச் சிந்திதாய்போன்று ஞாலத்தைக் காக்கும் நமது தமிழ்மறையாம் திருக்குறளோ அறிவின் ஊற்றாம்!ஏய்ப்போரை வாய்மையினால் வென்று, உலகில் ஏற்றமுடன் வாழ்வதற்கு உறுதியேற்றுதூய்மையுடன் மெய்பொருளாய் அறிவைக் கொண்டு துல்லியமாய் ஆய்ந்தறிந்தால், உலகே செழிக்கும்!!!- நெய்வேலி க.தியாகராசன், குடந்தை.