உழவனின் பசி - தமிழ் இலெமுரியா

20 August 2013 7:38 am

கம்மஞ் சோறுதான்என்றாலும் கவலை இல்லைகருவாட்டுக் குழம்புதான்என்றாலும் கணக்காவதில்லை ஆனாலும்ஒரு அகப்பை தான் கிடைக்கும்நேரம் தவறினால்அதுவும் கிடைக்காதுதம்பியிடம் சண்டையும் நிற்காது.உழுகப்போன அப்பாகொண்டு வரும் மீதிக் கஞ்சிக்காககாத்திருப்பாள்அவளுக்கான பங்கைப் பெறத் தாய்வரப்பில் வைத்த கஞ்சிச் சட்டியைத் தட்டிவிட்டு பசிபோக்கும் காக்கைகள்உழுகும் மாட்டின் முதுகில்சவாரி செய்யத் தயாராகும்.உழுத களைப்பில்பசியாறத் திரும்பும் வியர்வை அருவிக்குகவிழ்ந்த சட்டியே மிச்சம்.கஞ்சியில்காக்கை வாயும்கரிசக் காட்டு மண்ணும் வழிந்தோடும்பசியாற சிந்திய கஞ்சியெடுத்துஊதிக் கொண்டிருக்கும்நாவில் நீரற்ற உதடுவாய்க்கு எட்டிய புற்களை மேய்ந்துகாலிச் சட்டியை சுமந்து வீடு திரும்பும்உழுத காளைகளுக்கு முன்னேநடக்கும் கலப்பை சுமந்த பசி.மாடு அவிழ்த்துக் கட்டும் முன்கஞ்சித் தண்ணீர் கேட்டுகொதிக்கும் வற்றிய குடல்வீட்டுக்குள்தலைப்பாகை எடுத்துஉதறும் போது விழும்ஏங்க மீதிக்கஞ்சி இருக்கா?"என்றவளின் பேச்சு. – வாலிதாசன் சென்னை."

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி