15 October 2016 6:39 pm
மலையாளன் மாரேமலையாளன் மாரேமலைகடல் அலைபுரள்மலையாளன் மாரேமலையாளன் மாரே…வாழையும் கமுகும் வாசல்தோறும்நிமிர்ந்தோங்கி நிற்கும்மலையாளன் மாரேநெடுங்குன்றம் நிறைந்திடும்மலையாளன் மாரே…அயல்தமிழ் துரத்தியஅருந்தமிழ்ச் சொற்களைஅரவணைத்துக் காக்கும்மலையாளன் மாரே…தேக்கு மரங்களும்தென்னை மரங்களும்காப்பிக் கொட்டைகளும்தேயிலைச் செடிகளும்இரப்பர் மரங்களும்ஏலம் இலவங்கம்எங்கும் மணந்திடும்மலையாளன் மாரே…மனைகளில் வளரும்மலர்வகை ஒருநூறுசுனைகள் தோறும்சுடர்வெள்ளி ஒழுக்காய்நீர்மாலைத் தோரணம்நெடிதோங்கி நிற்கும்மலையாளன் மாரே..ஏற்றத்தும் இறக்கத்தும்போற்றி நடந்திடும்மலையேறுகின்றமலையாளன் மாரேசெருமிக் கணைக்கும்அரபிக் கடலின்சீற்றம் தணிக்கும்சேரத் தேசத்தாரே..அயலகம் தோறும்அடிமேல் அடிவைத்துபடித்தறிந்து பயணம் செய்துமலையாளத்துவத்தைநிலைபெற நிறுத்தும்மலையாளன் மாரே..சிரிப்புக்கிடைவிடாஅழகில் கிடக்கும் பெண்குட்டி மாரேஅச்சன் மாரேஅம்ம மாரேஅப்பச்சி மாரேஅரசியல் மாரேஎல்லாமாரும்இதைக் கேளுங்கோமலைமுகில் தவழும் மலைவெளி உயரத்தில்இழை இழையாய்ப் பெருகும்இன்னிசை ஆற்றில்ஏற்றம்பெறு நீரைஇயற்கைத் தேவைக்குஎடுப்பதற்குப் பதிலாகபுயற்கை விரித்துபறித்தெடுத்துப் போய்அரபிக் கடலின்அடிவயிற்றில் கலப்பதேன்?கல்லை யுருட்டிகற்கண்டாய்ப் பெருகிடும்முல்லைப் பெரியாற்றின்முலையறுக்க நினைப்பதேன்?மறுநாடன் மலையாளிகள்மகிழ்வாக வாழ்வதெங்கே?தமிழக! நிலமன்றோ ! இங்குதழைத்துச் செழிக்கின்றீர்!..மலையாளன் மாரேமலையாளன் மாரேமனம் கொள்ள வேண்டுகிறேன்மலையாளன் மாரே..மதிமதி என்றால்புனல்மிகு மலையாளத்தில்போதும்போதும் என்றுபொருள்மதிமதி என்றால்எம்தமிழ் மதிப்புத் தாருங்கள்என்றே பேசும்தண்ணீர் உங்களுக்குப்போதும் போதும்தண்ணீர் எங்களுக்குவேணும் வேணும்மலையாளன் மாரேமலையாளன் மாரேஎங்களை மதியுங்கள்மலையாளன் மாரே…