எங்கள் தமிழ் வெல்லும்! - தமிழ் இலெமுரியா

16 December 2014 2:42 pm

செங்கதிராய் உலகத்தில்  தோன்றி, மேன்மைச் செம்மொழியாய்ச் சிறப்பெய்தி மொழிகட் கெல்லாம் துங்கமுயர் தாய்மொழியாய்க் கால மெல்லாம் துரத்தி வந்த பகைமைகளை எதிர்த்து வென்றே பொங்குகட லால் அனலால் புயலால் பூமிப் புதைவுகளால் மூடர்கள் செயலால், தீய பங்கமுறு சிதலைபுழு புச்சி  தூசால் பாதித்துவம் விளங்கிவரும் தமிழ்என் பாரே!  தான் பெற்ற பிள்ளைகளே தன்னைப் பின்னால்  தள்ளிவிட்டு முன்னேறிச் செல்வ தேபோல்  இந்நாளில் முயல் – ஆமை இனம் போல் ஓட்டப் போட்டியைத்தான் நடத்தி வரும் இறுதியாக வென்றிடுமே சோராமை! தமிழ ரெல்லாம் முயலாமை கொண்டதனால் பின்னால் நின்றார் அன்னைமொழி தன்னைவிழி யாகக் கொண்டே ஆர்த்தெழுக, அனைத்தினிலும் தமிழே கொள்க! முன்தோன்றி முத்தமிழாய்த் துறைகள் தோறும்  முழுவளர்ச்சி மிகக் கொண்டு பெருகி இந்நாள் முன்னேற்றங் கட்கெல்லாம்  அந்த நாளே விளைநிலமாய் இருந்ததின்பத் தமிழே யாகும்!புன் மனத்தர் பொறாமைகொண் டோர்கள் இன்றும் பொல்லாத கேடுகளே சூழ்ந்திட் டாலும்  தன்னேரில் லாவலிமை பெற்றே  ‘எங்கள் தமிழ் வெல்லும்!’ உயிராகப் போற்றுவோமே!  – கவிஞர் க.அ. பிரகாசம், கொடுமுடி.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி