என்று தணியும் இந்தக் கொடுமை - தமிழ் இலெமுரியா

22 July 2015 12:46 pm

என்று தணியும் இந்தக் கொடுமைகயர்லாஞ்சி மகாராட்டிர மாநி லத்தில் கயமைக்குக் காட்டாக நிற்கும் ஓர்ஊர்வயலினிலே தினமுழைத்தே அந்த ஊரில் வாழ்ந்திட்ட சுரேகாஒரு தலித்துப் பெண்ணாம்உயர்தற்குக் கல்விநல்ல ஏணி என்றே உணர்ந்ததனால் ஓரளவு கற்றி ருந்தாள்தயக்கத்தைத் தகர்த்தெறிந்தே கணவ னோடு தன்சாதி கீழ்மையினை எதிர்த்து நின்றாள் !ஆதிக்க சாதிவெறி அரக்கர் தம்மின் அடக்குமுறை கொடுமைக்குப் பதிலு ரைக்கசாதிமாறி அம்பேத்கர் சென்ற தைப்போல் சார்ந்திட்டாள் புத்தமத அரவ ணைப்பில்வீதியிலே குடிசையாக இருந்த தன்னின் வீட்டைக்கல் வீடாக்க முனைந்த போதுமோதியுயர் சாதியர்கள் தடைகள் செய்தே மொத்தமாக வெளியேற்ற முனைந்து நின்றார் !வீட்டிற்கு மின்சாரம் துண்டித் தார்கள் வீட்டினிலே வளர்த்துவந்த ஆடு மாட்டைகேட்காமல் பலர்சேர்ந்தே தடுத்த போதும் கேள்விமுறை இல்லாமல் ஓட்டிச் சென்றார்வீட்டோடு விவசாயம் செய்வ தற்கும் விட்டிடாமல் கால்வாய்நீர் தடுத்து நின்றேகூட்டாக வயலையுமே பொதுப்பா தைக்குக் குறிவைத்தே வன்முறையால் பறித்துக் கொண்டார் !எதிர்த்திட்ட சுரேகாவின் குடும்பந் தன்னை எழுபதிற்கும் மேற்பட்ட கிராமத் தார்கள்குதித்துவந்து குண்டுகட்டாய்த் தூக்கி வந்து குரூரமாக தெருவினிலே நிற்க வைத்துவிதித்திட்டார் அவள்மகனைத் தங்கை யோடு விலங்கைப்போல் உறவுகொள்ள துன்பு றுத்திமிதித்திட்டார் ! மறுத்ததனால் அவன்உயிர் நிலையை மிருகம் போல் நசுக்கியுயிர் பறித்துக் கொன்றார் !இலங்கையிலே தமிழர்க்கு நடந்த போன்றே இங்கேயும் சுரேகாவை பெற்றெ டுத்தகுலமகளைப் பகற்பொழுதில் பல்லோர் காணக் குதறிட்டார் கூட்டாக உறவு கொண்டுநலமாக சுயமரியா தையில் வாழ நற்கனவு கண்டவளைக் குடும்பத் தோடுநிலம்மீது பிணமாக வீழ்த்தி விட்டார் நின்றெரியும் உயர்சாதி வெறித்தீ யாலே !மதிகாண சந்திராயன் அனுப்பி யென்ன மங்கல்யான் செவ்வாய்க்கு விடுத்து மென்னவிதிமாற்றி வல்லரசாய் இந்தி யாவை வியக்கின்ற படிஉயர்த்த முயன்று மென்னமதிதன்னில் சாதியத்தை நீக்கி விட்டு மனந்தன்னில் மனிதத்தை பதிய வைத்துப்புதியமாற்றம் சாதியற்ற இந்தி யாவாய் புலராத வரையெந்த புகழும் வீணே ! - பாவலர் கருமலைத்தமிழாழன்( மகாராட்டிரா மாநிலத்திலுள்ள கயர்லாஞ்சி ஊரினிலே நடந்த நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்ச்சி )காதல்இனவிருத்தி அறிவியல்தான்  காதல், உள்ள ஏக்கத்தின்  காரணங்கள்! காலம்  கண்டுநினைவோடு நாளமிலா சுரப்பி செய்யும்   நிமிட்டுதலே இனக்கவர்ச்சி, இவை இன்றிவனமில்லை, உயிர்த்தொகுதி இல்லை, இந்த வட்டநிலம்  பாலைவன மாகும்! காதல்நினைப்பில்லை, அம்மனமாய்  இருந்த போதும் நெருங்கிவரு வாரில்லை! முத்த மில்லை!மாராக்கு விலகியுள்ள காட்சி கண்டால் மனம்மயங்கும் , புளகமுறும்  மயிர்க்கா லெல்லாம்!ஆராய்ச்சி செய்யாமல்  உடன்போக்  கெல்லாம் ஆகையால்தான், நாகரிகப்  பண்பாட்  டால்தான்தோரணமாய்  ஒழுக்கவிதி அமைத்தார்  மூதோர்! தொடர்கின்றோம், துறவுநிலை மேன்மை வைத்தோம்!காரணத்தால்  காத்திருப்போம், காதல்  மாயை, கானல் நீர்  தாகத்தைத்  தீர்ப்ப தில்லை!காய்ச்சாத பாலில்பிறை குத்தி வைத்தால்   கட்டாயம்  தயிராவ தில்லை, வாழ்வில்காய்ச்சுவது கல்விபெறல், வேலைத்  தேடல், காதல்பிறை பெற்றோர்கை பணியாய்  ஆனால்ஆய்வின்றி சொந்தங்கள்  தொடரும் , இன்னும் அடுத்துவரும்  தலைமுறைகள்  தொடரும், வீணில்மாய்கின்ற நிர்பயாக்கள்  வேண்டாம், ஆண்டாள் மணப்பாடல்  அம்மியினைக்  கனாக்கா ணுங்கள்!- ஆசுகவி ஆராவமுதன்பொம்மை கை தவறி பொம்மைகீழே விழுந்துவிட்டது.விழுந்த வேகத்தில் சுக்குநூறாய் உடைந்தது.என் மனதும் தான்!அது என் மகள்ஆசை ஆசையாய்வாங்கிவந்த பொம்மை. வீசும் காற்றில்ஆடும் சுடரை இருகை வைத்துஅரண் கட்டி காப்பது போல்காத்த பொம்மையிது. நிமிர்ந்து பார்த்தேன்எதிரே அவள்.பரவாயில்லை அப்பாபோகட்டும் விடுங்கள்.பேசியது என் மகள்பார்த்தது என் தாயை!  – கே. ஆர். சிறினிவாசன்தூர்ந்துபோன வாழ்க்கைமேய்ச்சல் நிலங்களிலும்வாய்க்கால் வரப்புகளிலும்களத்துமேடுகளிலும்ஒலித்தமாட்டுக்கழுத்துவெங்கல மணியும்,கைமருந்தும்பாலும், தேனும்பாசமும் ஊட்டியசங்கும்,என்னாளும்நிலாச்சுடர்பூக்கும்காமாட்சி விளக்கும்இருண்ட விளக்குமாடத்தில்நூலாம்படையில்கட்டுண்டு கிடக்கிறதுநசிந்துபோனநம் கிராமத்துவாழ்க்கையைப்போல்- இறை.ச.இராசேந்திரன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி