11 January 2015 5:22 pm
தேர்தல் தொடர்ந்து வருகிறது தேயம் விடிந்த பாடில்லையார்யார் நிற்பது தெளிவில்லை யார் நின்றாலும் பயனில்லைதேர்தல் நேர வாக்குறுதி தேர்தலின் போதே சாகிறதுதேர்தல் முடிந்து போனவர்கள் தேர்தல் வந்தால் வருவார்கள்ஊழல் செய்ய முடிகிறது ஊரை வளைக்க முடிகிறதுஏழைக் குழைக்கும் செயல்மட்டும் இதயம் மறந்து போகிறதுவாழப் பிறந்தோர் சாகின்றார் வறுமை நெருப்பில் வேகின்றார்ஆழ ஆழ தவறுகளை அரசியல் வாதி செய்கின்றார்திட்டம் போடத் தெரிகிறது தெளிவாய் பேசத் தெரிகிறதுமட்டில் லாத ஏழைகளின் வாழ்க்கை ஏனோ எரிகிறது?கொட்டும் வியர்வை குடிக்கின்றார் கோடி கோடி அடிக்கின்றார்பட்டம் பெற்ற இளைஞரெல்லாம் பாவம் தெருவில் அலைகின்றார்வாயைத் திறந்தால் பொய்யுரைகள் வாக்குக் காக சில்லரைகள்நோயைப் போன்ற அரசியலார் நோக்கம் இதுவாய் இருக்கிறதுசேயைக் கொன்றால் தாயில்லை தெளிந்து நோக்கின் அரசியலும்தாயைப் போன்று தானில்லை தவிப்போர்க் காக அஃதில்லைநல்லோர் எல்லாம் பதுங்குகிறார் நமக்கேன் என்றே ஒதுங்குகிறார்வல்லோர் எல்லாம் சட்டத்தை வளைத்தே அடித்து நொறுக்குகிறார்உள்ளே இருக்கும் எரிமலைகள் ஒருநாள் திறக்கும் இரு விழிகள்வல்லார் பொல்லார் அதற்கில்லை மருட்சி என்பதும் அதற்கில்லை- சின்னமணல்மேடு த.இராமலிங்கம்