எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - தமிழ் இலெமுரியா

14 February 2014 9:11 am

குடியாட்சி தோன்றிட்ட நல்ல நோக்கம் குவலயத்தில் எல்லோரும் எல்லாம் பெறவேகுடியாட்சி காலத்தில் மக்கள் எல்லாம் குறைவின்றி வாழ்வதுதான் காணோம் இங்கேமுடியாட்சி நடந்தபோதில் நீதி நேர்மை முடிந்தவரை நிலைத்ததையே அறிவோம் நாமேகுடியாட்சி பயனெல்லாம் சிலரே மட்டும் கோடிகளைச் சேர்ப்பதற்காய் ஆன திங்கே.மக்களாட்சி என்றுசொல்லி மக்கள் தம்மை மனசாட்சி இன்றிசிலர் ஏய்க்கக் கண்டோம்தக்கமுறை ஆட்சியிங்கே மலர்வ தற்கோ தகுதியானோர் நாடாள வழிகள் வேண்டும்எக்காலம் தன்னிலுமே தப்பாய் ஆளும் எத்தர்கள் ஒழிந்திடவே சட்டம் வேண்டும்மக்களினம் தம்வாக்கை நல்லோர் ஆள மதியுடனே அளிக்கின்ற திறமை வேண்டும்.பல்லாயி ரங்கோடி சேர்த்து மகிழும் பாவிகளாய்ப் பலபேர்கள் வாழு கின்றார்இல்லமேதும் சொந்தமாக இல்லாப் பல்லோர் இந்நாட்டில் இன்றுகூடக் காணு கின்றோம்பல்வேறு சட்டங்கள் வந்த பின்னும்  பல்லோரோ ஏழைகளாய் இருத்தல் ஏனோ?எல்லோரும் எல்லாமும் பெறவே சட்டம் எந்நாளில் தோன்றிடுமாம் இந்த நாட்டில்?தனியொருவர் பத்துகோடி மேலாய்ச் சொத்தைத் தனக்கென்று சேர்ப்பதற்குத் தடைகள் வேண்டும்மனிதர்க்குள் மன்னர்கள் ஏழை என்ற மாறுபாடு இனியேனும் மறைய வேண்டும்மனிதகுலம் முழுவதுமே படிப்பில் சொத்தில் மண்ணாள உரிமைகளைப் பெறவும் வேண்டும்இனியேனும் எல்லோரும் எல்லாம் பெறவே ஏற்றமிகு வழிகளைநாம் காணு வோமே. – இராம.பரஞ்சோதி.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி