ஏன்…? யாரிட்ட சாபமிது…?? - தமிழ் இலெமுரியா

15 July 2014 3:59 am

சொத்துக்களை இழந்தோம்சொந்தங்களை இழந்தோம்இருப்பிடம் இழந்தோம் – அத்தனைக்கும்மேலாக கற்புகளை இழந்தோம்ஏன்…? யாரிட்ட சாபமிது…??குற்றங்கள் அறிவிக்கப்படும்தண்டனை காலமும் சொல்லப்படும்குற்றவாளிகளுக்கு…! – நாங்கள்குற்றவாளி இல்லை, தண்டனைகாலமும் சொல்லப்படவில்லை; – ஆனாலும்நாங்கள் குற்றவாளிகள், ஆளுவோரின்ஆணைப்படி, நியாயப்படியல்ல!ஏன்…? யாரிட்ட சாபமிது…??குடைக்குள் குடும்பங்கள் போல்முள்வேலிக்குள் நாங்கள்!கணவனுக்கு முன் நுகரப்படும்காயம்பட்ட பூக்கள்!ஏன்…? யாரிட்ட சாபமிது…??சாகவும் மனமில்லை!வாழவும் முடியவில்லை!எழுதாத விதிகள் எங்கள்மீதுஎழுதப்படுகிறது! பொய்யானகுற்றங்கள் புணையப் படுகின்றன!ஏன்…? யாரிட்ட சாபமிது…??அண்டையரை நம்பினோம்,அவர்களின் அன்புக்கு ஏங்கினோம்!நட்புக்கரம் நீட்டவில்லைநம்பிக்கையை ஊட்டவில்லை! – எங்களின்கண்ணீரையும் செந்நீரையும்கண்டும் நெஞ்சில் கருணை அரும்பவில்லை!ஏன்…? யாரிட்ட சாபமிது…??திட்டமிட்ட கொலைகளை நிறுத்தஇனஅழிவைத் தடுக்க – எந்தப் பேரரசும் முன்வரவில்லை!ஏன்…? யாரிட்ட சாபமிது…??செத்தவற்கு சிம்பதிதவிப்போற்கு பரிதாபம்இது அறச் செயல்தானா?கறைபடிந்த கரங்களுக்கு பூங்கொத்து, ஒருசகாப்தத்தின்கண்ணீருக்கு… வெறும் வார்த்தைஜாலம்! ஏன்…? யாரிட்ட சாபமிது…?? – கே.ஜாபர்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி