18 August 2015 3:33 pm
ஒரு கருப்பு நிமிடம்ஒரு கருப்பு நிமிடத்துள்எத்தனைக்கண்ணீர்த் துளிகளைநிரப்ப முடியும்?காலம்தான் முடிவுசெய்யமுடியும்ஒரு கருப்பு நிமிடத்துள்எத்தனை நாள்களின்கருக்கலைக்க முடியும்?காலம்தான் முடிவு செய்யமுடியும்ஒருகருப்பு நிமிடத்துள்எத்தனைக்கல்லறைகள்கட்ட முடியும்?காலம்தான் முடிவுசெய்யமுடியும்ஒரு கருப்பு நிமிடத்துள்எத்தனைச் சூரியர்களைநிரப்பி வைக்கமுடியும்?மனிதன்தான் முடிவுசெய்யமுடியும்ஒரு கருப்பு நிமிடத்துள்எத்தனைவெளிச்சக் கவிதைகளைஎழுதி வைக்கமுடியும்?மனிதன்தான் முடிவுசெய்யமுடியும்ஒரு கருப்பு நிமிடப்புற்றுக்கட்டியை அகற்றிக்காலத்தை எப்படிக்காப்பாற்றிக் காக்கமுடியும்?மனிதனால்தான் முடிவுசெய்யமுடியும்- ஈரோடுதமிழன்பன்மேலோர் ஆனார்உலகத்து மக்களெலாம் கண்ணீர் சிந்த ஒப்பற்ற மாமணியாம் கலாமை அந்தோகலகலத்த கூற்றுவனோ கொண்டு சென்றான்,கையற்று மனம்ஓடிந்து நிற்கின் றோமே !மலையொன்று சாய்ந்ததுபோல் ஆன தன்றோ !மரகதத்தேர் ஒடிந்தேதான் போயிற் றந்தோ !நிலைகுலைந்த தாயகத்து மக்கட் கெல்லாம்நெஞ்சில்வேல் தைத்ததுவே, அந்தோ ! அந்தோ !கண்ணொத்த நமதுகலாம் பிரிந்தார் அந்தோ !கண்ணிழந்து வாடுகின்றோம் என்ன செய்வோம்?எண்ணற்ற இளைஞர்களின் எழுச்சி யாகஈடற்ற அறவுரைகள் சொல்லி இந்தமண்ணகத்தை வல்லரசாய் மாற்றச் சொன்னார்,மனிதத்தை நேயத்தை வளர்க்கச் சொன்னார்,எண்ணத்தில் அறிவேற்றி இந்த நாடுஏற்றமுற வளங்காண வழியைச் சொன்னார்.அறிவியலைப் பொறியியலை அணுவின் ஆற்றல்அத்தனையும் அவர் அளந்தார்; இந்தி யத்தின்திறமையினை உலகுக்குக் காட்டி நின்றார்.செயலெல்லாம் மனிதவள நன்மைக் கென்றார்,துறைதோறும் துறைதோறும் எழுச்சி யுற்றுத்தொல்லுலகில் தலைநிமிரச் செய்தார்;இறப்பினிலே அவர்சாய்ந்தார், என்ன செய்வோம்?இனியிவர்போல் குடியரசில் யாரைக் காண்போம் !மழைமுகிலாய்க் குளிர்தருவாய் வீசும் தென்றல்மணக்கின்ற சோலையதாய் விளங்கி நின்றார்;குழலிசையாய் இசைப்பயனாய் இனிக்கும் இன்பம்கொடுக்கின்ற தாயமுதாய் விளங்கி நின்றார்,தழைகின்ற இனிமையினை அன்பை யார்க்கும்தந்தருளும் தலைவரென விளங்கி நின்றார்,மொழிகடந்தே இனம் கடந்தே உறவு பூண்டார்;மூச்சிழந்தார்; அந்தந்தோ கலங்க விட்டார் !- கலைமாமணி கல்லாடன், புதுச்சேரிகாலத்தின் வரலாற்றுப் புத்தகம் கலாம் !காலம் தனது எழுதுகோலை எடுத்துமுனை முறியுமாறு வைத்துவிட்டுப் போனதுஓர் முற்றுப் புள்ளிஅனல் மனிதரை மரணம்கணம் ஒன்றில் கைப்பற்றியதுஅணுவைத் துளைத்த அறிஞனேஅழுது கொண்டே பறக்கிறது தேசியக்கொடிஅரைக்கம்பத்தில்பத்து நூறு ஆயிரம் இளைஞர்கள் உள்ளனர் ஆனால்பாசறை முகாமின் தலைவர் இன்றில்லைவிக்ரம் சாராபாய் விட்ட இடத்திலிருந்துநீ தொட்ட இடம் அக்னி ஏவுகணைகல்லூரி இளைஞர்களுக்கு எழுதிக் கொடுத்த ஒற்றைச் சூத்திரம்குறிக்கோளை வைத்துக் கனவு காணுங்கள்கடற்கரை இன்று கையறுநிலையில்கிளிஞ்சல் சிப்பி முத்து என்ற கழுத்து நகைகளைக் கழற்றி வைத்துள்ளதுவல்லரசு என்று மறைமொழி சொன்ன முதல் தலைவன் நீ !எங்கள் தலைவர்கள் பணம் பதவிகளைச் சுற்றிவந்தபோதுநீயோ இளைஞர்களைச் சுற்றிச் சுற்றி வந்தாய்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த நீதெய்வத்துள் வைக்கப் படுகிறாய்இராமேசுவரம் இனிமேல் சொல்லப்படட்டும்கலா மேசுவரம் !- பூ.அ.இரவீந்திரன்