15 September 2014 6:07 am
பாகற்காய்ச் சாறுடன் சோறு ’பிடிக்காது’ என்றது மழலை;’பிடி’காதை அதனடி நுனியில் என்ற தட்டினார் அப்பா – நல் லமுதூட்டும் அன்னை யிடம் ஆங்கில இலக்கணப் பாடம் ’பிடிக்காது’ என்றது மழலை;அடிக்காதைப் பிடித்த ஆசிரியர் பிரம்படி கொடுத்தேனு மேற்ற கொடுந் தேளாய்த் தாளாளர் அரும்பும் அன்புக் குழந்தைக்கு அமுதும் ஆங்கிலமும் பாகற்காய் ;பெற்றவரும் ஆசிரியரும் நெருஞ்சி;கல்விக் கூடமோர் கொடுஞ்சிறை ;வருந்தி வ(வா)சிக்க வாடகை லட்சத்தில் ?வாணிபப் போக்கில் சமூகம் - வேண்டா வெறுப்பில் வளர்ப்பு! இனியும் வேண்டா மித்துன்பம்; நனி மழலையர்க் குண்டுரிமை அரும்பாகி மொட்டாகிப் பின்மலராக !!அகவை ஆறுவரை தாய்தன்மார் பணைத்தூட்டும் அமுதே வுணவு சுற்றிய புடவைத் தொட்டிற் பள்ளி நிலவைச் சுட்டியும், சுடுங்கதிர் வெய்யிலைச் சாடியும் பாடிப் பாரினையு மூட்டுவதே தாய்க்கல்வி !நன்னூலுடன் தொல்காப்பியப் பிடிப்பும்திருக்குறளந் தேன்திணை மாவும் நல்வழி மூதுரையிணைத்த ஆத்திசூடிகம்பன்பாவும் கம்பங்கூழும் வரகுக்கழியும் தேவாரத் திருவாசகாமுடன ருட்பாவும்தெள்ளுதமிழ் அமுதெனத் தேனிசையுடன் ஊட்டிடத் தமிழ் மழலையர் ஞானமுற்று நல்லமைதிசூழ் ஞாலங்காண்பர் – உணர்வீர் பாரிலுள்ள தமிழரெலாம் பாங்குடனே ஒன்றிணைந்து சமைத்திடுவோம் ஓருலகம்!வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!!-அழகன் கருப்பண்ணன், கோவை