15 November 2013 1:22 am
நிலைபெற்ற உலகில் தேயும்நிழல்போல மறைவர் பல்லோர்!கலைவாணர் அவர்போல் தோன்றிக்கணப்போழ்தில் மறைந்தார் அல்லர்;சிலைபெற்ற கல்லின் மீதில்செதுக்கிய எழுத்தைப் போலநிலைபெற்றார்; தமிழர் தம்மின்நெஞ்செலாம் வாழ்வு பெற்றார்.திரையிலே நாட கத்தில்திரும்பினால் பாட்டு, பக்திவரைமுறை யற்ற மூடவழக்கங்கள் புராணப் பொய்மை!கரையிலா ஆற்றல் வாய்ந்தகலை வாணர் இவற்றையெல்லாம்நுரைபோல ஊதித் தள்ளிஉயர்வுற்றார் புகழை அள்ளிநடிப்பிலே மட்டு மல்லநாயகன்; செல்வம் யாவும்அடுத்தவர்க் களித்து வாழ்ந்தஅதியமான்; சிறைவாழ் வாலேநொடித்துப்போய் வந்த போதும்நோகாமல் எல்லாம் ஈந்தபடத்துறை கண்ட ஏழைப் பங்காளன்; எளியர் தோழன்ஏற்றத்தில் இருந்த சாதிஇழிவெனும் போக்கை ஐயர்தோற்றத்தில் நடித்துக் கொண்டேதோலுரித் திடுவார்; இந்தமாற்றத்தைப் பெரியார் அண்ணாவாழ்த்தவே செய்த வள்ளல்காற்றிலே கலந்து விட்டார்கலைவாணர் புகழைத் தொட்டார்!- கவிஞர் தமிழேந்தி