15 November 2013 12:42 am
என்னாட்டின் இளையோனே! வருங்கா லத்தில்இந்நாட்டை அடகுவைத்தே அடுத்த நாட்டின்பொன்னான ஆட்சியிலே புழுவைப் போலபொங்கிவரும் உணர்வின்றி அடிமைப் பட்டேகண்ணான இனமொழியைக் கலங்க விட்டேகாலமெலாம் தீராத களங்கம் ஏற்றுமண்ணோடு மண்ணாக மாய்ந்து போகமணியாக மதுப்பழக்கம் கொண்டாய் வாழி!இந்நாட்டைத் தாங்கிநின்றே ஏற்றம் காணஎல்லாமே இயற்றிங்கே இருக்கும் மக்கள் நந்தலிலா நல்வாழ்வு நடத்த வேண்டிநற்கல்வி தாய்மொழியின் வழியே தந்துசெந்தமிழர் சீரான உயர்வு காணசெய்வதற்கே உனக்கென்ன தலையெ ழுத்தா?முந்துதமிழ் உன்னதுவா? முனைப்பாய்க் கள்ளில்மூழ்கிடுவாய்! இன்பமதில் முக்கு ளிப்பாய்!பெற்றவர்கள் மனமகிழ் பிறந்த வீட்டின்பெருமையினைப் பிறர்பேசும் பீடு கண்டேஉற்றவரும் மற்றவரும் உவகை கொள்ளஉன்குலமும் உன்னினமும் உயர்வு கொள்ளும்நற்செயல்கள் தனைநந்தி நடத்து தற்கேநல்லவர்கள் நா"வாழ்த்தும் நல்லான் நீயா?கற்பனையில் வாழ்பவனே! கவறும் கள்ளும்காலமெலாம் கைக்கொண்டே களிப்பில் ஆழ்க!-க.துரையரசன், வேலாயுதம் பாளையம்"