காலக் கலை - தமிழ் இலெமுரியா

15 July 2014 4:00 am

உடைந்திட்ட மனந்தான் சிந்தும்    உயிர்கொல்லும் எயிட்சின் கண்ணீர்அடைந்திட்ட தோல்வி எல்லாம்    அடங்காத காலக் கோலம்குடைந்திட்ட குகையாம் நெஞ்சில்    குவிந்திட்ட உணர்வின் வைப்பு தொடர்ந்திட்ட பலவாம் பாடம்             தோற்காத கால *ஓவம்!                         கலைந்திட்ட கனவு காட்டும்     காலத்தின் பாவ மாற்றம்மலைந்திட்ட செயல்கள் யாவும்    மாற்றங்கொள் அடவின் வேகம்தொலைந்திட்ட பொறுமை யாவும்    தொடரான சதங்கை ஓசைகுலைந்திட்ட வாழ்க்கை காலம்    குதித்தாடும் ஊழிக் கூத்து இயற்கையினைச் சிரிக்க வைத்து     இன்னிசையாம் வாழ்வை நல்கிசெயற்கையிலும் தனது வண்ணம்      செம்மையுறக் காட்டி நிற்கும்புயற்கையால் துன்ப வீணை      புவியினிலே மீட்டி ஏகும்அயற்பகையை முடிக்கும் தானே      அரியதொரு காலப் பாடட்டே. – சிங்கப்பூர் பார்வதி பூபாலன்                *ஓவம்-ஓவியம்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி