காலூன்றி நிற்கும் வாழ்க்கை! - தமிழ் இலெமுரியா

14 October 2013 9:38 am

அவிழ்க்க முடியாமல்அவதிப்பட வைக்கும்முடிச்சுகளைப் போற்றுகிறேன்!முடிச்சுகள்தான் முனைப்பாகமுயற்சி செய்யத் தூண்டுகிறது!முகம்சுளிக்க வைத்துமனத்துக்குள் ஆரவாரிக்கும்முரண்களை நேசிக்கிறேன்!முரண்கள்தான் படைப்பைமெருகேற்றி விடுகிறது!ஆன்மாவை அசைத்துப் பார்த்துஅழவைத்து ரசிக்கும்தோல்விகளை வரவேற்கிறேன்!தோல்விகளுக்குப் பின்னால்தானேவெற்றிகள் கண்சிமிட்டுகின்றன?விடைகாண முடியாமல்தத்தளிக்க வைக்கும்கேள்விகளைப் பாராட்டுகிறேன்!கேள்விகளில்தான் வாழ்க்கைகாலூன்றி நிற்கிறது!எதிர்மறைகள் ஒவ்வொன்றும்எழுச்சியுடன் செயலாற்றும் போது…திறமையின் பேராற்றல்சாதனைபுரிய வைக்கிறது!முடிச்சுகளும்… முரண்களும்…தோல்விகளும்… கேள்விகளும்…சோதனைகள் அல்ல!… வாழ்வில்சாதிக்கத் தூண்டும் மந்திரங்கள்!- பாவலர் கருமலைப் பழம் நீ, சென்னை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி