16 September 2015 11:33 am
சிற்றெறும்பு…பிறந்த மேனியில் திரிகின்றஎறும்புக்கு இரையைத் தவிரஎன்னதான் வேண்டுமோ?அதனுடைய வயிறென்னஅத்தனை பெரிதா?கடுகில் கால் பாகமில்லைஅத்தனைச் சிறியது!எறும்புக்கு வாய் எங்கே?கண் காது மூக்கெங்கே?கண்டுபிடிப்பவனுக்குஎத்தனை கொடுத்தாலும் தகும்.எறும்பின் பல்லுக்கு இத்தனைகூர்மையா? கடித்தால் அதைஅடிக்க வேண்டியுள்ளது!அரிசியை மூட்டையாக அல்லஒரே ஓர் ஒற்றை அரிசியைப்புரட்டிப் புரட்டி இழுத்துப் போய்ஊசிமுனைப் பொந்துக்குள்பதுக்குவதைப் பார்த்தால்நம்மவூர் வியாபாரிகள் தான்நினைவுக்கு வருகிறார்கள்.ஆனால் ஒன்றுபுரட்டத்தான் எறும்புக்குத் தெரியும்புரட்டுச் செய்யத் தெரியாது!துளியூண்டு சர்க்கரையைசிந்திப் பாருங்கள்எங்கிருந்துதான் வருமோமொய்க்கிறது! – அதன்மோப்ப சக்தியைமுனைவர் பட்டத்துக்கேஆய்வு செய்யலாம்!- பெ.சிதம்பரநாதன், கோவைபுதுக் கவிதையா?மரபுக் கவிதையா?புதுக்கவிதை மோகத்தில் மூழ்கிப் பாடல்புனைகின்ற என்நண்பா! கொஞ்சம் நில், நில் !விதிகளுக்குள் நமைமுடக்கி மரபில் தீட்டல்வீண்வேலை என்றாநீ சொன்னாய்? பாட்டுள்எதுகைகளும் மோனைகளும் இழையும் போதேஇதமான சதங்கையொலி அதற்குக் கிட்டும் !எதிர்நீச்சல் போட்டீங்குக் காலம் வென்றேஇறவாமல் ஒளிர்வதுதான் மரபுப் பாடல்‘விதிமுறையேன்? இலக்கணமேன்?’ என்றே என்னைவினவுகின்ற உன்னிடத்தில் கேட்பேன்; ‘ஓடும்நதிகளுக்குக் கரைகள்ஏன்?’ எனக்கேட் டாயா?‘நால்வரப்பும் வயலுக்கேன்?’ எனக்கேட் டாயா?விதிவகுத்து வீடுகளைக் கட்டி னால்தான்வீதிஎழில் நேர்க்கோடாய் மிளிரும்! செந்தேன்மதுக்கவிதை யாப்பழகைப் பெற்றால் தானேமனத்துள்ளே கல்வெட்டாய்ப் பதியும் நண்பா!‘திருப்புக’ழின் சந்தஇசை மரபு பாடல்தித்திப்பை ஊட்டுவதேன்? ‘திருக்குற் றால’ப்பெருமைசொலும் ‘குறவஞ்சி’ வண்ணம் நம்மைப்பித்தர்களாய் மாற்றுவதேன்? செந்நாப் போதார்அரிய‘குறள்’ வெண்பாச்சீர் நேர்த்தி, உள்ளம்அள்ளிநமை ஈர்ப்பதுமேன்? அதனால், நண்பா!உருப்படியாய் உன்கவிதை நிலைக்க வேண்டின்ஒயில்மரபில் எழுதிடுநீ! அதுதான் வாழும்!- கவிவேந்தர் கா.வேழவேந்தன்விம்ம வைக்கும் கருப்பு யூலைநீறு பூத்த நெருப்பாய் நெஞ்சமதில் கனன்று எரிந்து பிஞ்சு மனதையும் கசக்கி பிழிந்து விம்ம வைக்கும் கருப்பு யூலைகொழும்பு திருகோணமலை மலைநாட்டில் பிறந்தவர்கள் சொந்த ஊர், சொந்த இடம் என்று நினைத்து உற்ற நண்பர் நம் சொந்தம் என்றும் தோழமைக் கொண்டவர்களை ஒரே நாளில் நீங்கள் தமிழர் தான் என்று உணர்த்திய கருப்பு யூலை சிங்கள வெறியாட்டம் நரபலியாட்டம்சித்திரைவதையின் உச்சக்கட்டம் குருதி ஆற்றில் குளியாட்டம் அநீதியின் எல்லைக்கட்டம் அகிம்சையின் முடிவுக்கட்டம் தமிழர் வீடுகளை எரித்தனர் கையில் வைத்திருந்த பெயர்களில் சரியிட்டனர்அப்பாவித் தமிழரை எரியூட்டினர்தமிழ் குழந்தைகளை அநாதையாக்கினர்தமிழ்ப் பெண்கள் கற்பை சூறை ஆடினர் தமிழ்த் தாயினரை விதவையாக்கினர்பிறந்து வளர்ந்த இடத்தில் அகதியாக்கினர் கூடித் திரிந்த நட்புகளை பிரித்தெடுத்தனர் குடும்பங்களைச் சிதறச் செய்தனர் கூடி குலாவிய நண்பர்கள் கூட பாராமுகம் காட்டினர் எல்லாம் நடந்ததும் அந்த கருப்பு யூலை மாதத்தில் தான் நெஞ்சை கனக்க வைக்கும் அந்த கருப்பு யூலை மாதத்தில் தான்உயிர் காக்க ஓடியதும் அந்த கருப்பு யூலை மாதத்தில் தான்பல உறவுகளை இழந்ததும் அந்த கருப்பு யூலை மாதத்தில் தான்இன்றைய அவல நிலைக்கு அடிகோலியதும் அந்த கருப்பு யூலை மாதத்தில் தான்நிரந்தர அகதி அந்தஸ்தை தந்ததும் அந்த கருப்பு யூலை மாதத்தில் தான்கொடிய நினைவுகள் எம்மோடு இன்னமும் நிலைத்து நிற்கிறது! ஆண்டுகள் பல சென்றாலும் இன்னமும் கனத்து நிற்கிறது! - மீரா குகன்பொற்காலப் பதிவுகள்கண்மணியே தமிழினத்தின்கலைநிதியே! காலையெழும்விண்மணியாய்த் தமிழ்நாட்டைவிழித்தெழவே செய்தவரேஎண்ணியெண்ணி உளம்மகிழும்எழைகளின் புன்சிரிப்பில்விண்ணரசைக் கண்டவர்நாம்வியந்தேத்தும் காஞ்சிஅண்ணா.ஆட்சியிலே நடுநிலமைஅன்பினிலே குறள்முறைமைகாட்சியிலே தனிஎளிமைகலைகளிலே நிறைபுலமைதீட்சணமாய்ச் செயல்திறமைசெப்பரியா சொல்வலிமைமாட்சிமையும் நிறைஅறிஞர்மனங்கவர்ந்த காஞ்சியண்ணா.கவினுருசெந் தமிழ்மொழியும்கருணைமிகு ஆட்சியலும்செவிகுளிரும் சொற் பொழிவும்சினமறியா உயர்குணமும்கவிபுகழும் அரசியலின்கண்ணியமும் செயல்திறனும்புவியினிலே அண்ணாவின்பொற்காலப் பதிவுகளே!- குடந்தை பரிபூரணன்வ.உ.சி.யை மறக்கலாமா?தன்னுடைய தாய்பசியால் துடித்தி ருக்கத் தானம்செய் கயவாளி மகனைப் போலத்தன்னுடைய தமிழினத்தில் பிறந்தும் நல்ல தமிழ்ப் பற்று வீரத்தைப் பெற்ற போதும்தன்னுடைய நாட்டுக்காகச் சிறையில் வாடித் தவித்திட்டுத் தன்பொருளை இழந்த போதும்தன்னலத்தை விட்டவனை நினைத்தி டாமல் தறுதலையாய்ப் பிறர்தம்மைப் புகழ லாமா?செக்கிழுத்தான்! சிறையினிலே கல்லு டைத்தான்! செந்தமிழின் நூல்களுக்குப் பொருளு ரைத்தான்!மிக்கான சிலநூலை ஆங்கி லத்தில் மெருகிட்டான்! மொழிபெயர்த்தான்! பதிப்பித் திட்டான்!எக்காளம் கொட்டிட்டுக் கடலின் மீதே எம்தமிழன் வ.உ.சி. கப்பல் விட்டான்!அக்காலம் இந்நாட்டு விடுத லைக்கே ஆரிவனைப் போலெதிர்த்தே ஆர்ப்ப ரித்தார்?மற்றவரை வாய்வலிக்கப் புகழும் நண்பீர்! மானமிகு தமிழர்களும் மறைந்தார்! அந்தஉற்றவரைப் பாராட்ட உணர்ச்சி கொள்வீர்! உன்தாய்க்கு முதல்வணக்கம்! பிறகே மற்றோர்!கற்றவராய்க் கற்றபடி நடக்கும் நல்ல கசடற்ற தமிழர்களை மறவா தீர்கள்!நற்றேனைச் சுவைக்காமல் நஞ்சை நச்சும் நாகரிகக் கோமாளி ஆக லாமா?- புலவர் பெ.செயராமன், கல்லக்குறிச்சி