செங்கால் நாரைகளே! - தமிழ் இலெமுரியா

15 December 2013 5:51 am

செங்கால் நாரைகளே! எங்கும் செல்கின்ற தூதர்களேதீயுண்ட பனைகளின் சாம்பல் சுமந்தும்தேம்பும் தமிழர்தம் கண்ணீர்  சுமந்தும்மண்ணுண்ட மனிதர்தம் வேட்கை சுமந்தும்மௌனம்மூடிய சொற்கள் சுமந்தும் கிளைகளில் அல்லாது மனங்களில் அமர்ந்து கேளாத செய்தியைக் கூவிப்பறக்கின்ற செங்கால் நாரைகளே!எதிரிகள் துரோகிகள் எல்லாத்திசையிலும்இறப்பின் குழிகளில் ஒவ்வொருமனிதமும்சாட்சியம் இன்றி நடந்த இனக்கொலை தருக்கித் திரிகிறான் எதிரிஇதுவரை கூக்குரலோடு புரைந்து போகுமோ கட்டியகூடும் அடைகாத்த கொள்கையும்? செங்கால் நாரைகளே!பிடிமண்தேடி உலகக் கரைகளில்முளைத்து நிற்கிற இனத்தின் வேர்களேநெடுங்குரல் விரித்து வீசிய காற்றில்கிழிபட்டுப் போனது அரசின் பொய்களே சாம்பலைவிலக்கி முளைக்குமோர் குருத்தாய் செவ்வாய்திறந்து சாட்சியம் சொல்லும் செங்கால் நாரைகளே! - கவிஞர் இன்குலாப்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி