16 December 2014 2:35 pm
தமிழ் நாட்டின் தாய் மொழியாம்தமிழ் மொழியைக் காக்கவே தமிழரெல்லாம் ஒன்றிணைந்தே- தனிதமிழ் தேசியமமைப்போம் தமிழ்த் தரணியில் நம் மொழியாம் தமிழ் மொழித் தேயுமென்றே உலக மொழியறிஞர்கள் கூறுகிறார்கள் இனி வருங்கால இளந்தலைமுறைகளையும் நம் தாய் மொழித் தமிழ் மொழியையும் அழியாமல் காக்கும் கடமைஇன்றைய தமிழறிஞர்களுக்கும் தன்மானம்முள்ள தமிழர்களுக்குமாம் இது காலத்தின் கட்டாயமன்றோ !!!தமிழ் மொழியைக் காக்க தன்னுயிரையே ஈந்தோர் எண்ணற்ற தியாகிகளை- நாம் எண்ணியே நினைவு கூறுவோம் அந்தாதியாய் முனைந்த தமிழ் மொழி -இனி வரும்காலங்களிலும் வளரும் மொழி தமிழ் நம் மொழி உலகமறிந்த தமிழ் மொழியாம் தமிழர்கள் தம் மொழியை காக்காமலிருப்பது தகுமோ?காக்காமல் விட்டால் இழிநிலையாகுமன்றோ? தமிழ் மொழியைக் காக்க எத்தனைத் தடைகள் வருமாயினும் -நாம்அத்தனைத் தடைகளையும் தாண்டியே தமிழ் தேசியமமைத்து நாடு, மொழி, இனம் வளர்ப்போம்! காப்போம்!! – இரா.சொ.இராமசாமி, கோவை