தழுவிடும் பெருமை! - தமிழ் இலெமுரியா

14 February 2014 9:12 am

பொறுமையால் வீழ்ந்தார் இல்லை பொறாமையால் வாழ்ந்தார் இல்லை.வறுமையால் தாழ்ந்தார் இல்லை வளத்தினால் உயர்ந்தோர் இல்லை.உறுதியே வேண்டும்; நெஞ்சில் உண்மையே வேண்டும்; நன்மைஉறுவதே புரிய வேண்டும் ஊறினைத் தவிர்க்க வேண்டும்!சிறுபொறி பெருந்தீ யாகும் சினத்தீயும் அவ்வா றாகும்!சிறுமையே பெருமை தன்னைச் சிதைத்திடும்! கோடி நன்மைபுரிந்தவர் கூடச் சின்னப் பிழையினால் தாழ்ந்து போவார்!தெரிந்திட வேண்டும் எல்லாம்தெளிவோடு வாழ்வ தற்கே!திருக்குறள் நெறியினைத் தேர்ந்து தினம்அதன் பெருமை ஓர்ந்துஉருவாக்க வேண்டும் வாழ்வை உலகுக்கோர் எடுத்துக் காட்டாய்!வருவது புரியும்; நல்ல வாய்ப்புகள் விரியும்! தீமைதருவது விலகிப் போகும் தழுவிடும் பெருமை தானே! – க.அ.பிரகாசம், கொடுமுடி

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி