10 September 2013 11:59 pm
அறிவியலில் முன்னேறி கோள்கள் விட்டே அன்பூறும் வழிகளினை அடைத்து விட்டோம்வெறியூட்டும் சாதிகளைத் தோளி லேற்றி வீதியெல்லாம் குருதியினை ஓட விட்டோம்நெறிகளினை வாய்பேசச் செயல்க ளெல்லாம் நேர்மையற்ற முறைகளிலே நடக்க விட்டோம்குறிக்கோள்கள் இல்லாத குருட்டு வாழ்வாய்க் குறுநெஞ்சத் தன்னலத்தால் குலைய விட்டோம்!ஊர்வலங்கள் நடத்திநிதம் உரிமை கேட்டே உண்மையாக உழைப்பதற்கே மறந்து விட்டோம்தேர்வலமாய் வரும்ஆட்சி யாளர் தம்மைத் தேவரெனப் போற்றியேநம் மானம் விட்டோம்சீர்திருத்தம் செயவந்தோர் ஊழல் செய்து சிறப்புறவே கேட்கின்ற துணிவு விட்டோம்தார்சூடி ஏய்ப்போர்கள் எதிரில் வந்தால் தவறுகளைச் சுட்டாமல் தலைமை விட்டோம்!வேற்றுமைகள் நமக்குள்ளே பெருக்கிக் கொண்டு வேண்டாத பகைமையினால் நட்பை விட்டோம்கூற்றாக ஒற்றுமையைக் கூறு போட்டே கூடிநாட்டை உயர்த்துகின்ற உணர்வை விட்டோம்போற்றுகின்ற நாடாக்கிப் பொலிவைச் சேர்க்கப் பொறுப்புடனே இளைஞர்தாம் வருதல் வேண்டும்நாற்றுகளாய் அன்புணர்வை நட்டு நாட்டை நன்னெறியில் நடத்துதற்கே எழுக இன்றே!-பாவலர் கருமலைத் தமிழாழன்.